நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

இல்லற இன்பம் ,மருத்துவம் நூல்கள்

அர்த்தமுள்ள அந்தரங்கம்

உயிர்த் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல. இந்தப் பரிணாமங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக ஜீன்கள் கையில் எடுத்திருக்கும் யுக்திதான் காமம்.
காமமா! என அதிர்ச்சியடைந்தாலும், ஆமாம்! என ஒத்துக்கொள்ள வேண்டிய பல அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இனப்பெருக்கம் இருந்திருக்காது. உயிர்களும் தழைத்திருக்காது. ஆக, வாழ்வியல் தேவைக்கான முக்கிய அம்சமாகக் காமம் இருக்கிறது. ஆனால், காம உணர்வில் வக்கிரம் நுழைகிறபோதுதான் அது உயிருக்கு எமனாக முடிகிறது. அதற்கும் உளநலவியல் ரீதியான அறிவியல் காரணங்கள் பல இருக்கின்றன.
பன்னிரெண்டு வகையான மனித காமத்தையும், அதனால் மனித இனத்தில் ஏற்பட்ட வாழ்வியல் ஏற்ற இறக்கங்களையும் அர்த்தமுள்ள அந்தரங்கம் என்ற இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கிறார் டாக்டர் ஷாலினி.
இந்தப் புத்தகத்தில் மனித இனத்தின் அந்தரங்கம் குறித்த ஆச்சரியமூட்டும் உண்மைகளும், அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்களும் நிரம்ப உள்ளன. காமத்தின் ஆதாரக் குணங்களோடு மனித இனத்தின் அந்தரங்கப் பிரச்னைகளை, உளநலவியல் பூர்வமாக அணுகி இருக்கிறார் நூலாசிரியர்.

Download

டூயட் கிளினிக்

அன்பு, கோபம், அழுகை, வெறுப்பு, ஆசை, காதல், காமம்... என மனித உயிர்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகள் ஏராளம். இதில், காதலும் காமமும் தவிர்க்க முடியாதது என்பது எவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் பாலுணர்வு, இளமைப் பருவத்தில் தொடங்கி முதிய பருவம் வரையில் வாழ்க்கையில் பல வகையில் சுக_துக்கங்களை அளிக்கவல்லது.
விபரீதமான வித்தியாசமான ஆசைகளை ஏற்படுத்தும் இந்தப் பாலுணர்வை, ஒவ்வொருவரும் எப்படி கையாள வேண்டும் என்பதில் தொடங்கி, குழந்தைகள் மத்தியில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பாலுணர்வு தொடர்பான செய்திகளை குழந்தைகளிடம் எப்படிச் சொல்ல வேண்டும், தாம்பத்திய வாழ்வில் துணையிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், உடலுறவின்போது ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்ன..? _ இப்படி நம் மனதில் எழும் பல கேள்விகளுக்கான பதில்களை, அசத்தலான உதாரணங்களோடு விளக்கியுள்ளார் நூலாசிரியர் டாக்டர் டி.நாராயண ரெட்டி.
ஆனந்த விகடனில் டூயட் கிளினிக் என்ற தலைப்பில் வெளிவந்து கொண்டிருக்கும் தாம்பத்தியத் தகவல்கள், செக்ஸ் பற்றிய ஆழமான கருத்துகளை மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.


Download

தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை

இந்தியா என்கிற புனித பூமியின் பெருமைகளில் சிலவற்றைப் பற்றிய சிறிய அறிமுகத்தோடு, தன்னுடைய பயணத்தை நூல் துவக்குகிறது. இவ்வாறு துவக்க வேண்டியது இந்த நூலின் கடமை. ஏனெனில், பண்டைய இந்தியப் பெருமைகளில் முதன்மையாகத் திகழும் ஒரு ஞானத்தைத் தழுவியே இந்நூல் எழுதப் பட்டுள்ளது
ஆண்களுக்கான ஓர் அற்புதப் புதையல்,இன்பம், மன அமைதி,பணியில் கவனம், தொழிலில் வெற்றி, நிம்மதியான உறக்கம், மகிழ்ச்சியான இல்லறம், வெற்றிகரமான வாழ்க்கை, குழைந்தைகளுக்கான எதிர்காலம், உடல் நலம் மற்றும் நீண்ட ஆயுள் என இவை அனைத்தையும் பெற்று, வாழ்வைக் கொண்டாடி மகிழ்ந்து வாழ விரும்பும் ஆண்களுக்கான, ஆலோசனை! விழிப்புணர்வு! வழிகாட்டி!


Download

குறிப்பு : நூல்கள் வாசிப்பினை ஊக்குவிக்கும் விதமாக மட்டுமே நூல்கள் பகிரப்படுகிறது . இது போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்க நூல்களை வாங்கிப் படியுங்கள்.


Post a Comment

0 Comments