பொது அறிவு தகவல்கள் - உளவியல்





                


1. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் – டிட்ச்னர் (Edward Bradford Titchener)
2. மானிட உளவியல் Humanistic Psychology – கார்ல் ரோஜர்ஸ்மாஸ்கோ
3. உளவியல் பரிசோசனைகள் – வெபர் (E.H.Weber)
4. உள இயற்பியல் (PSYCHOPHYSICS) – ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
5. முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் – வல்கம் வுண்ட் Wilhelm Wundt
6. தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் – சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
7. மருத்துவ உளவியல் முறைகள் – மெஸ்மர்
8. அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget,  புரூணர் Jerome S.Bruner.
9. நுண்ணறிவுச் சோதனைகள் – பினே Alfred Binet,  சைமன் Theodore Simon
10. கருவிசார் () செயல்பாடு ஆக்கநிலையிறுத்தக் கற்றல் – ஸ்கின்னர் (B.F.Skinner)
11. மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் – கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
12. சமரச அறிவுரைப் பகர்தல் -   F.C. தார்ன் F.C.Thorne
13. முழுமைக்காட்சிக் கோட்பாடு – கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.
14. ஆக்க நிலையிறுத்தக் கற்றல் – பாவ்லவ் Irvanpetrovich Pavlov
15. முயன்று தவறிக் கற்றல் – தார்ண்டைக்
16. நடத்தையியல் (Behaviourism) – வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
17. உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு – ஹல்
18. உட்காட்சி மூலம் கற்றல் – கோலர்
19. நுண்ணறிவுச் சோதனையின் தந்தை – ஆல்பிரட் பீனே
20. நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு – ஜே.பி.கில்போர்டு
21. நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு ஸிரில் பர்ட் – வெர்னன்
22. நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை – தார்ண்டைக்
23. நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை – எல்.எல்.தார்ஸ்டன்
24. நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை – ஸ்பியர்மென் (Charles Spearman)
25. இயல்பூக்கக் கொள்கை – வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
26. குறிக்கோள் கோட்பாடு – பாக்லி W.C.Bagley
27. பொதுமைப் படுத்தல் கோட்பாடு – ஜட்
28. ஒத்தக்கூறு () ஒத்த குணங்கள் கோட்பாடு – தார்ண்டைக்
29. மறத்தல் சோதனை – எபிங்காஸ் – H.Ebbinhaus
30. மறத்தல் கோட்பாடு – பார்ட்லட்
31. அடைவூக்கம் – டேவிட் மெக்லிலெண்ட்
32. படிநிலைக் கற்றல் கோட்பாடு – காக்னே
33. களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை குர்த் லெவின்
34. அவாவு நிலை அல்லது விருப்ப அளவு – டெம்போ(Dembo)
35. பார்வைத் திரிபுக் காட்சி – முல்லர், லயர்
36. முதன்மைக் கற்றல் விதிகள் – தார்ண்டைக்
37. நவீன உளவியலின் தந்தை – பிராய்டு
38. குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் – ஸ்டான்லி ஹால்
39. கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை – யூங்
40. பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை – முர்ரே – மார்கன்.
41. மைத்தடச் சோதனை – ஹெர்மான் ரோர்சாக்
42. பகுப்பு உளவியல் – கார்ல் ஜி யூங்
43. தனி நபர் உளவியல் – ஆட்லர்
44. உளப்பகுப்புக் கோட்பாடு – சிக்மண்ட் பிராய்ட்
45. வளர்ச்சி ஆளுமைக் கொள்கை – சிக்மண்ட் பிராய்டு, ஆட்லர்யூங்
46. வகைப்பாடு – அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை – ஐசன்க்(H.J.Eysenck)
47. அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை – G.W.ஆல்போர்ட்  , R.B.காட்டல்
48. வகைப்பாடு ஆளுமை கொள்கை – ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.
49. மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் –தர்ஸ்டன், லிக்கர்ட்
50.தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் – பிரெஸ்ஸி
51. தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் – ஸ்டிராங்
52. தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் –கூடர் (G.F.Kuder)





#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !