இதன்மூலம் பார்வையற்றோர்களும் நேரடியாக மொபைலில் தட்டச்சு செய்யலாம் என கூகுள் அதன் வலைதளத்தில் தெரிவித்துள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்த கூகுளின் Talkback சேவை எப்போதும் பயன்படுத்தும் வகையில் On-லேயே இருக்க வேண்டும். Talkback சேவை குறிப்பாகப் பார்வைற்றோருக்காக உருவாக்கப்பட்டது என்பதால் திரையில் தோன்றும் அனைத்தையும் அந்தச் சேவை கண்காணிக்கும்.
ஏனெனில் திரையில் தோன்றும் அனைத்தையும் பயன்படுத்துபவருக்கு வாசித்துக்காட்ட வேண்டிய தேவை இருக்கும். பரெய்லி கீபோர்டு வசதியானது ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கு மேலுள்ள இயங்குதளங்களுக்குப் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்திருக்கிறது கூகுள்.
இந்த வசதியைப்பெற கூகுளின் Talkback சேவையை ஆன் செய்து, பின்னர் அதன் வழிகாட்டுதலின்படி சென்று ஆக்டிவேட் செய்யலாம் என நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Talkback சேவையை பயன்படுத்த மொபைல் போன்-ல் Settings தேர்வு செய்து பின்பு Accessibility- ஐ தேர்வு செய்ய வேண்டும் . பிறகு Talkback On-லேயே இருக்க வேண்டும்.