ஆன்மீக மற்றும் அறிவுப்பூர்வமான இரண்டு தளங்களிலும் உண்மையை மனிதன் கண்டடைய வேண்டியதன் முக்கியவத்துவத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து, மனித குலத்திற்கான நற்செய்தியைக் கொண்டுள்ள நூலாக குர்ஆன் விளங்குகிறது.
ஒவ்வொரு நூலுக்கும் ஒரு கருப்பொருள் மற்றும் நோக்கம் இருக்கும். குர்ஆனின் கருப்பொருள் மற்றும் நோக்கம் இறைவனின் படைப்புத்திட்டத்தை மனிதனுக்கு எடுத்துரைப்பதாகும். அதாவது இவ்வுலகத்தை இறைவன் படைத்தது ஏன், பூமியில் மனிதனை குடியமர்த்தியதன் நோக்கம் என்ன, மரணத்திற்கு முன்உள்ள இந்த வாழ்க்கையில் மனிதன் என்ன செய்யவேண்டும், மரணத்திற்குப் பின்னரான நிரந்தர வாழ்க்கையில் என்ன நிகழும் என்பனவற்றைத் தெளிவுபடுத்துவதேயாகும்.