நாடோடி இலக்கியத்தைச் சார்ந்தவை பழமொழிகள். அறிவு தெரிந்த சிறுவர் முதல் முதுமை உடையவர்கள் வரை யாவரும் தாம் பேசும் பொழுது பழமொழிகளை ஆளுவார்கள். அவரவர் களுடைய அனுபவத்துக்கு ஏற்ற வகையில் அவை இருக்கும். மேலும் , இலக்கிய இலக்கணங்கள் ஆகியவற்றைப் பற்றிய பழமொழிகளும் உண்டு. விலங்கினங்கள், பறவைகள், நீர்வாழ் பிராணிகள், ஊர்வன, புழுபூச்சிகள் முதலியவற்றைப் பற்றிய பழமொழிகள் பல. இவற்றை ஆராய்த்து கட்டுரைகளை எழுதலாம். பல பெரியோர்களுடைய வரலாறுகள் சம்பந்தமான பழமொழிகளும் உண்டு. கம்பன், ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்களைப் பற்றிய பழமொழிகள் சில உள்ளன.
இந்நூலின் ஆசிரியர் ஏறத்தாழ 25,000 பழமொழிகள் தொகுத்துள்ளார் .
பகுதி -I