பிரசவகால ஆலோசனைகள் - பூவை ஆறுமுகம்




மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா. என்ற கவிதை வரிக்கேற்ப, தாய் நாடு என்றும் தாய் மொழி என்றும் தாய்க்குலம் மிகவும் உயர்வுபடுத்திப் பேசப்பட்டு வருகிறது. அத்தகைய பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தாய்மைப் பேறு என்னும் பிரசவ காலம் என்பது ஓர் இனிமையான சுகானுபவத்தைத் தரும் ஒரு பருவமாகும்.

அத்தகைய பிரசவ காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக் கும் ஏற்படும் உடலியல், மனவியல் மாற்றங்கள், அக் காலத்தில் அப்பெண் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட நடைமுறைப் பழக்கவழக்கங்கள், மருத்துவ சிகிச்சைகள், உணவு முறை போன்ற பல்வேறு நுணுக்கமான விவரங் களை பலருக்கும் பயன்படக்கூடிய வகையில் இந்நூலில் ஆசிரியர் சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறார்.




Comments