கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்படும்.பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கான தேதியை அக்டோபர் 5ம் தேதி வரை நீடித்துள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 28 இணைப்பு கல்லூரிகள் மற்றும்14 உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
இவற்றிலுள்ள கல்லுரிகளில் இளங்கலை படிப்புகளுக்காக மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை ஆன்லைன் மூலம் 45,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதியை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீடித்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், விண்ணப்பித்தோற்கான தரவரிசைப் பட்டியலும் அக்டோபர் 15-ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்குமாறு பெற்றோர் அளித்த கோரிக்கையை ஏற்று இந்த கால நீட்டிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை நிர்வாகம் வழங்கியுள்ளது .
வாசிப்பு மட்டுமே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்தும்! எவ்வாறு ?
0 Comments