இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
குழந்தைகளுக்கு எதிரான பாலினக் குற்றங்கள் இந்தியாவில் பெருகி இருக்கின்றன. இவற்றில் ஒரு சிறு பகுதி மட்டுமே வெளிச்சத்திற்கு வருகிறது. கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளில் 53% குழந்தைகள் ஏதோ ஒரு வகையிலான பாலினச் சீண்டலுக்கு ஆளாகியிருக்கின்றனர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. பல நேர்வுகளில், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் குடும்ப உறுப்பினர்களாகவோ, நெருங்கிய உறவினர்களாகவோ, அறிமுகமான ஒரு நபராகவோதான் இருக்கின்றனர். பாதிக்கப்படும் குழந்தைகள் பொதுவாக இதைப்பற்றி வெளியில் சொல்வதில்லை.
அத்தகைய குழந்தைகளின் மனதில் வாழ்நாள் முழுவதும் மாறாத வடுவாக இந்த பாதிப்பு அமைந்துவிடும். பாலினத் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு புலனுணர்வுக் குறைபாடு, வன்செயல், மனப்பதற்றம், மனச்சோர்வு உட்பட பலவிதமான இடர்தரும் நடத்தைகள் உருவாகிவிடும் ஆபத்து இருக்கிறது.
வெட்க உணர்வு, குற்ற உணர்வுகளுக்கு ஆட்படுவதும், பிறருடன் கலகலப்பாக பழகுவதைத் தவிர்ப்பதும், சுயமதிப்புக் குறைவும் இதர பிற விளைவுகளாகும்.
Posco e-box
பாலினக் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POSCO) மின்னணுப் பெட்டி, பாலினரீதியாக துன்பத்திற்கு ஆளாக்கப்படும் குழந்தைகள் பற்றி ஆன்லைனில் தகவல் தெரிவிப்பதற்கான ஏற்பாடாகும். குழந்தைகளின் உரிமைப் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்தின் (NCPCR) முன் முயற்சியினால் செய்யப்பட்டிருக்கும் இந்த ஏற்பாடு, பாதிக்கப்பட்ட குழந்தைகளே நேரடியாக ஆணையத்திற்குத் தகவல் தெரிவிப்பதற்கு உதவக் கூடியது. எளிதில் புகார் அளிப்பதற்கும், தவறு செய்பவர்கள் மீது Posco சட்டம் 2012இன் கீழ் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் வழிசெய்கிறது. மின்னணுப் பெட்டி இயக்குவதற்கு எளிதானது. புகாரும் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
இது எப்படி வேலை செய்கிறது?
குழந்தைகளின் உரிமைப் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்தின் இணையதள முகப்புப் பக்கத்தில் Posco ebox உடன் தொடர்பு கொள்வதற்கான இணைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. Posco ebox என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் க்ளிக் செய்ய வேண்டும்.
முதல்படி : Posco ebox பொத்தனை க்ளிக் செய்ததும் திரையில் ஒரு உயிர்ப்பூட்டப்பட்ட படம் தோன்றும். உங்களுக்கு என்ன நேர்த்திருந்தாலும் அது உங்களுடைய தவறினால் ஏற்பட்டதல்ல. எனவே, அதற்காக குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம். NCPCR உங்களுக்கு உதவும் நண்பன் என்ற நம்பிக்கையை அந்தப்படம் தரும்.
இரண்டாம்படி : திரையில் ஒரு அம்புக்குறி தெரியும். அந்த இடத்தில் க்ளிக் செய்யும் போது, அடுத்து ஒரு பக்கத்திற்கு அது அழைத்துச் செல்லும். பாலினச் சீண்டல்களின் வகைகளைத் தெரிவிக்கும் படங்கள் இந்தப் பக்கத்தில் காணப்படும். இதில் ஒரு படத்தை தேர்வு செய்யவேண்டும்.
மூன்றாவது படி : கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, நேர்ந்திருக்கும் தொல்லை இவைபோன்ற தகவல்களை தெரிவித்து இங்கு தெரியும் ஒரு படிவத்தை நிறைவு செய்யவேண்டும். பிறகு படிவத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள submit பொத்தானைச் அழுத்த வேண்டும். இப்போது, இந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு தனித்த அடையாள எண் ஒன்று திரையில் தோன்றும்.
Posco சட்டம் பற்றி
குழந்தைகளின் மீது ஏவப்படும் பாலியல் கொடுமைகள் குறித்து கவலை கொண்டுள்ள அரசாங்கம் Posco சட்டத்தை இயற்றியது. பாலியல் சீண்டல், பாலியல் தாக்குதல், ஆபாசப் படங்களைக் காட்டுதல் போன்ற குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் குழந்தைகளுக்குத் தோழமையான அம்சங்கள் சட்ட வழிமுறைகளின் ஒவ்வொரு நிலையிலும் சேர்க்கப்பட்டுள்ளன. குற்றம்பற்றி தெரிவித்தல், ஆதாரங்களைப் பதிவு செய்தல், புலன் விசாரணை, சிறப்பு நீதிமன்றங்களின் மூலம் விரைவான வழக்கு விசாரணை ஆகியவற்றிற்கு எளிய முறையில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. 18 வயதுவரை உள்ள் எவரும் குழந்தை என்றே இந்த சட்டத்தின்படி கருதப்படுகின்றனர்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அக்டோபர் 7- முதல் LKG படிப்பிற்க்கான சேர்க்கை துவக்கம்
மேலும் விவரங்களுக்கு குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம்.
0 Comments