பிபிஎஃப் (PPF) Public Provident Fund ) கணக்கை ஏன் தொடங்க வேண்டும்?நன்மைகள் என்ன?

 பொது வருங்கால வைப்பு நிதி

பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் (பிபிஎப்) Public Provident Fund கணக்கு வரியை சேமிக்கக்கூடிய ஒரு கருவியாகும். இந்த பிபிஎஃப் கணக்கின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. மேலும் இந்த முதலீட்டுக்கான வட்டிக்கு வரி செலுத்தத் தேவையில்லை. ஒரு பிபிஎஃப் கணக்கை அஞ்சலகம் அல்லது ஐசிஐசிஐ அல்லது எஸ்பிஐ போன்ற வங்கிகளில் தொடங்கலாம். ஆன்லைன் மூலம் இந்த கணக்கைத் தொடங்க வேண்டும் என்றால் அதை ஐசிஐசி வங்கியில் தொடங்கலாம்.

பிபிஎஃப் கணக்கை எவ்வாறு துவங்குவது?

    பிபிஎஃப் கணக்கைத் துவங்க குறைந்தது ரூ.500 தேவை. ரூ.500 என்பது மிகச் சிறிய தொகையே. எனவே மாத வருமானம் பெறும் எல்லோரும் இந்த கணக்கை மிக எளிதாக துவங்கலாம்.

    பிபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால், அவர் சேமித்த பணம் மற்றும் அதன் வட்டி ஆகியவை அவருடைய நாமினிக்கு வழங்கப்படும்.

    பிபிஎஃப் கணக்கைத் துவங்கிய 3வது முதல் 6வது ஆண்டுக்குள் வங்கிக் கடன் பெறலாம்.

    வேலைக்கு சேர்ந்தவுடன் இந்த கணக்கைத் தொடங்கிவிட்டால் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது மிகப் பெரிய தொகையைப் பெறலாம்.

    பிபிஎஃப் கணக்கைத் துவங்கி 15 ஆண்டுகள் முடிந்துவிட்டால் மேலும் 5 ஆண்டுகளுக்கு கணக்கைத் தொடரலாம்.

    மேலும் இந்த கணக்கில் பல தவணைகளில் முதலீடு செய்யலாம். ஆனால் வரி விலக்கு பெறும் தொகை ரூ.1 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக உங்களுக்கு 25 வயது ஆகிறது என்று எடுத்துக் கொள்வோம். இந்த வயதிலிருந்து நீங்கள் பிபிஎஃப் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.10,000ஐ 8.8 சதவீத வட்டி விகிதத்தில் முதலீடு செய்கிறீர்கள். முதலாண்டு முடிவில் நீங்கள் ரூ.10,860 பெறுவீர்கள். பின் இந்த ரூ.10,860 மீண்டும் முதலீடு செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு முதலீடு செய்து வந்தால் 15 ஆண்டுகள் கழித்து நீங்கள் மொத்தமாக ரூ.3,09,010 பெறுவீர்கள். நீங்கள் முதலீடு செய்த பணத்திலிருந்து பெறும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. முதலீட்டுக்கும் வரி விலக்கு பெறலாம்.


அறிந்துகொள்வோம் !தகவல் அறியும் உரிமைச் சட்டம்


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !