நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 368 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

>

 இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள  368 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இயற்பியல், கணிதம் பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள், எம்பிஏ மற்றும் பொறியியல் துறையில் பையர்(Fire), மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை:

 ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஆவணங்கள் சரிபார்த்தல், நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் ஓட்டுநர் சோதனை மற்றும் குரல் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


விண்ணப்பக் கட்டணம்: 

எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.170.மற்ற அனைத்து  விண்ணப்பத்தாரர்கள்  ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்பழகுநர் (Apprentices) கட்டணம் செலுத்த தேவை இல்லை. கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே  செலுத்த வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரபூர்வ அறிவிப்பில்  குறிப்பிடப்பட்டுள்ள தகுதி மற்றும் பிற விதிமுறைகளை  பூர்த்தி செய்வதை விண்ணப்பத்தாரர்கள் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வமான இணையதளமான  https://www.aai.aero/என்ற இணையதளத்தின் வழியாக 14/01/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்  https://www.aai.aero/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View 

 விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 15/12/2020

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14/01/2021

Read in English       

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments