தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் மினி கிளினிக் மற்றும் நல வாழ்வு மையங்களில் (HWC) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செவிலியர் மற்றும் பலநோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 146 காலியிடங்கள் உள்ள நிலையில் டிப்ளமோ நர்சிங் மற்றும் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் 11/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் விண்ணப்ப படிவங்களை அருகிலுள்ள மாவட்ட துணை சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் அல்லது வட்டார சுகாதார நிலையங்களில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) | மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
திண்டல்-638 012, ஈரோடு மாவட்டம்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :11/02/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.