அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பரிமாற்ற மையம் தகுதியானவர்களிடமிருந்து பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



ப்ராஜெக்ட் அசோசியேட்-2, தொழில்நுட்ப பிரிவு வணிகமயமாக்கல் நிர்வாகி-2, திட்ட உதவியாளர்-2,அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்-1 என மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட துறையில் பணியில் அனுபவம் உள்ளவர்கள் அஞ்சல் மூலம் 25/09/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.



ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.



விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து அஞ்சல் மூலம் தொடர்புடைய முகவரிக்கு 25/09/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

Director, Centre for Technology Development and Transfer,

Anna University, Chennai 600025

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்க கடைசி தேதி : 25/09/2021



அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.annauniv.edu/

அதிகாரப்பூர்வ அறிவிப்புView










#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !