ஏர்டெல்! இந்த மேட்டர் தெரிஞ்சா உங்க ஏர்டெல் சிம் கார்டை உடைச்சி தூக்கி போட்ருவீங்க!
நீங்களொரு ஏர்டெல் பயனராக இருப்பின், குறிப்பாக ஏர்டெல் நெட்வொர்க்கின் சேவையின் மேல் சிறியதொரு கோபம் கொண்ட பயனராக இருப்பின், முடிந்த வேகத்தில் வேறொரு நெட்வொர்க் உடன் இணைந்து கொள்ளவும். ஏனெனில் பாரதி ஏர்டெல் நிறுவனம் அதன் மூன்றாம் காலாண்டில் 1,035 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது.
இதன் விளைவாக நடக்கப்போகும் இன்னொரு விபரீதம்!
விட்டல் கூறியுள்ளது : "டிசம்பர் 2019 இல் மேற்கொள்ளப்பட்ட கட்டண திருத்தம் தொழில்துறையின் நிதி ஆரோக்கியத்தை சீர்செய்வதற்கான வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருந்தாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப தொழில்துறையை முதலீடு செய்வதற்கு சுங்கவரி மேலும் உயர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று விட்டல் கூறியுள்ளார்.
கடந்த 2019 டிசம்பரில், வோடபோன், ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களிடம், தங்களது ஏஜிஆர் நிலுவைத் தொகை தொடர்பாக, இந்திய அரசுக்கு அபராதம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதையடுத்து, அவைகளின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இதன் விளைவாக, குறிப்பாக பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பயனர்கள் தங்கள் எண்ணை ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாற்றி வருகின்றனர்.