10, 12-வது தேர்ச்சியா? மத்திய அரசின் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு!

பணியிடம் : கர்நாடகா 

பணிகள்: ஓட்டுநர், - 2, 
டெக்னீசியன் - 6, டெக்னீசியன்
 பயிற்சியாளர் - 34, ஆராய்ச்சி உதவியாளர் - 44
 ஆராய்ச்சி உதவி பயிற்சியாளர் - 50
என மொத்தம் 5 விதமான பணிகளுக்கு 137 காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது வரம்பு: 6 ஜனவரி 2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 ஓட்டுநர் பணியிடத்திற்கு மட்டும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியிருக்க வேண்டும். பிற பணிகளுக்கு குறைந்தபட்ச 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 
அதிகபட்சம், ஓட்டுநர் - 28, டெக்னீசியன் - 25, டெக்னீசியன் பயிற்சியாளர் - 24, ஆராய்ச்சி உதவியாளர் - 30, ஆராய்ச்சி உதவி பயிற்சியாளர் - 25 என வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

 வயது வரம்பு: அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 13 ஆண்டுகள், எஸ்.சி, எஸ்டி மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள், 1984 ஆண்டு கலவரத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தார் -5 ஆண்டுகள், ஆதரவற்ற விதவைகள், கணவரை விட்டு பிரிந்து வாழும் பெண்களுக்கு 35 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

 கல்வித் தகுதி :   ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணியிடத்திற்குக் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டெக்னீசியன் பணிகளுக்கான கல்வித்தகுதி: சர்வேயர், எலெக்ட்ரிசீயன், எலெக்ட்ரானிக்ஸ், ஃபிட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் போன்ற டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சியும், சம்பந்தப்பட்ட டெக்னீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டெக்னீசியின் பயிற்சியாளர்: டெக்னீசியின் பயிற்சியாளர் பணிக்கு 50 சதவிகித மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் ஐடிஐ படிப்பு முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்குக் குறைவாக ஐடிஐ படித்தவர்கள், ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
ஆராய்ச்சி உதவியாளர்: ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பயிற்சி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், சம்பந்தப்பட்ட பிரிவில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, திறனறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஓட்டுனர் பணிக்கு எழுத்துத்தேர்வுடன் வாகனம் ஓட்டி காட்ட வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.npcilcareers.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி அல்லது https://npcilcareers.co.in/KGSST2019/documents/advt.pdf?_ga=2.84764702.682159029.1576645395-464317252.1570079021 என்னும் லிங்க்கினைக் காணலாம்.

Download

source:carrier india
Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !