இந்திய உணவு கழகத்தில் 585 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
Food Corporation of India மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தில் இருந்து https://recruitmentfci.in/ இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூனியர் இன்ஜினியர், அசிஸ்டெண்ட் கிரேடு II, ஸ்டெனோகிராபர் கிரேடு II, டைப்பிஸ்ட் (ஹிந்தி), அசிஸ்டெண்ட் கிரேடு III உள்ளிட்ட பதவியிடங்கள் நிரப்பப்படுகிறது. மண்டல வாரியாக இந்த காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. தெற்கு மண்டலத்தை பொறுத்தவரையில், 79 காலியிடங்கள் உள்ளது.
1. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
2.1 ஜூலை 2019 தேதியின்படி, 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
3. எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
4. மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி 28 முதல் நடைபெறுகிறது.
இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும். Official Notification PDF