பி.இ (B.E) முடித்தவர்களுக்கு LIC நிறுவனத்தில் வேலை!.






உதவி பொறியாளர்கள் (ஏ.இ) - சிவில் / எலக்ட்ரிக்கல் / ஸ்ட்ரக்சரல் / எம்இபி & உதவி கட்டிடக் கலைஞர் (ஏஏ) மற்றும் உதவி நிர்வாக அதிகாரி (ஏஏஓ) பதவிக்கு 218 காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) அழைத்துள்ளது.

தகுதியானவர்கள் 2020 மார்ச் 15 வரை எல்.ஐ.சி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.licindia.in/Bottom-Links/Careers இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.




LIC Recruitment 2020: Important Dates:



வயது வரம்பு:


1.2.2020 தேதியின்படி, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 நிரம்பியவரகவும், அதிகபட்சம் 30 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2.2.1990 முதல் 1.2.1999 ஆண்டுக்குள்ளாக பிறந்தவராக இருக்க வேண்டும்.

SC / ST - 5 ஆண்டுகள், OBC – 3, PwBd(Gen) – 10, PwBD (SC / ST) – 15, PwBD (OBC) – 13 ஆண்டுகள், ECO / SSCO (GEN) – 5, ECO / SSCO (SC/ST) – 10, ECO / SSCO (OBC) - 8 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது..

கல்வித்தகுதி:


AE (சிவில், எலெக்ட்ரிக்கல், MEP இன்ஜினியர், ஐடி) அசிஸ்டெண்ட் ஆர்க்கிடெக்ட் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறைகளில் பி.இ, பி.டெக் இளநிலை பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், துறைசார்ந்த பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

AAO Chartered Accountant, Actuarial பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு டிகிரி, பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். AAO Legal பதவிக்கு சட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:


முதனிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதனிலைத் தேர்வு உத்தேசமாக ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறும்.

நேர்காணல்  தகுதி பெறுவதற்கான அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்:




முதனிலைத் தேர்வு திறனறிவு, ஆங்கிலம், கணித அறிவு என மூன்று தாள்களைக் கொண்டிருக்கும். மொத்தம் 1 மணி நேரம் நடைபெறும். 70 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்படும்.

இதே போல், மெயின் தேர்வில் திறனறிவு, பொதுஅறிவு, மொழியறிவு, இன்சூரன்ஸ், ஆங்கிலம் பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தேர்வுகள் மொத்தம் 2 மணி நேரம், 30 நிமிடங்கள் நடைபெறும்.


Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !