கோவையில் வரும் மே மாதம் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் , இந்திய ராணுவத்தின் தெற்கு மண்டல தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி, வரும் மே மாதம் 5 முதல் 17 ஆம் தேதி வரையில் கோவை பாரதியார் பல்கலைக்கழக விளையானத்தில் மைதானத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது .
இதன் மூலம் மதுரை,கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,திருப்பூர்,ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது .முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் ஆவணங்கள் சரிபார்ப்பு ,உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தெரிவு செய்யப்படுவார்கள் .
கல்வித்தகுதி :8th, 10th மற்றும் 12th pass .
வயது வரம்பு :
2020 அக்டோபர் 1ன் படி 17 வயது 6 மாதங்கள் முடிந்துருக்க வேண்டும் , 23 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்கவேண்டும் .சிப்பாய் பொது பிரிவிற்கு மட்டும் 21 வயதுக்குள் இருக்க வேண்டும் .
விண்ணப்பப்பதிவு மார்ச் 21 ஆம் தேதி முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி வரையில் நடைபெறும்.ஆர்வமுள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு www.joinindianarmy.nic.in அல்லது Tele No-0422-2223056 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும் .
Official Notification Download
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன!.
0 Comments