தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் ,வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என் தமிழக அரசு அறிவித்துள்ளது.மற்ற மொழிகள் பயன்படுத்தப்படும் எனில் முறையே ஆங்கிலம் இரண்டாவதாகவும் மற்ற மொழிகள் மூன்றாவதாகவும் இருக்க வேண்டும் .
மேலும், மேற்கூறிய வரைமுறைகளை கடைகள் ,வணிக நிறுவனங்கள் பின்பற்றவில்லை எனில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.