தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன!.


Tamil Nadu Pollution Control Board TNPCB எனப்படும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.




Image result for tamil nadu pollution control board jobs tamil




தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில்   பல்வேறு பதவிகளுக்காக மொத்தம் 242 பணியிடங்கள் காலியிடங்கள்  நிரப்பப்பட உள்ளன.








முக்கிய நாட்கள் :
  • விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்: 5 மார்ச் 2020
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 26 மார்ச் 2020
  • கணினி அடிப்பைடையிலான தேர்வு நடைபெறும் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnpcb.gov.in



நிரப்பப்படும் பதவிகள்  மற்றும் காலியிடங்கள் :

1.Assistant Engineer (உதவி பொறியாளர்)

மொத்த காலியிடங்கள் 78

உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிற்கும் விண்ணப்பதாரர்கள் சிவில், கெமிக்கல், சுற்றுச்சூழல் பிரிவில் இன்ஜினியரிங் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


2.Environmental Scientist (சுற்றுச்சூழல் விஞ்ஞானி )

மொத்தம் 70 காலியிடங்கள்

இப்பணிக்கு   விண்ணப்பிற்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு அறிவியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேதியியல், உயிரியல், தாவரவியல், சுற்றுச்சுழல் வேதியியல், சுற்றுச்சுழல் அறிவியல்,  நுண்ணுரியியல், மரைன் பயோலாஜி, உயிரிவேதியியல், அனாலிட்டக்கல் கெமிஸ்டரி, அப்ளைடு கெமிஸ்டரி, விலங்கியல் ஆகும்.

3.Junior Assistant  (இளநிலை உதவியாளர்)

மொத்தம் 38 காலியிடங்கள்

இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது கணினி துறையில் டிப்ளமோ போதுமானது.

4.Typist ( தட்டச்சர்)

மொத்தம் 56 காலியிடங்கள்

இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது கணினி துறையில் டிப்ளமோ போதுமானது.மேலும் ,அரசு தட்டச்சு தொழில்நுட்ப தேர்வில் தமிழ், ஆங்கிலத்தில் மேல்நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Age limit (வயது வரம்பு):

 12.2.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். 




 ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினருக்கு உச்சவயது வரம்பில்  தளர்வு அளிக்கப்பட்டுள்ளது .


Exam Fees (தேர்வுக்கட்டணம்): 

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), இதர வகுப்பினருக்கான தேர்வுக் கட்டணம் 500 ரூபாய் ஆகும். ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அ), ப.வ, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் 250 ரூபாய் ஆகும்.

Official Notification

 மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnpcb.gov.in



Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !