செபி (SEBI)-யில் காலியாக உள்ள 147 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தகுதியுடையவர்கள் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்: 147
தகுதி:
சி.ஏ., சி.எஸ்., சி.எப்.ஏ., சி.டபுள்யு.ஏ. மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பொது பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சட்டம், எம்.சி.ஏ., சிவில், எலக்ட்ரிக்கல், என் ஜினீயரிங் படித்தவர்கள் இவை சார்ந்த பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவில் முதுநிலை படிப்பு படித்தவர்கள், மொழி மற்றும் ஆராய்ச்சி பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
29-2-2020-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வுக்கட்டணம் :
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 மற்றும் பொது ,ஓபிசி பிரிவினர் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடையவர்கள் www.sebi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.மார்ச் 23-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
முதல்நிலை ஆன்லைன் தேர்வு ஏப்ரல் 12-ஆம் தேதியும், இரண்டாம் நிலை ஆன்லைன் தேர்வு, மே 3-ஆம்தேதியும் நடத்தப்படுகிறது. நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் www.sebi.gov.in
Official notification --- https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=147
To Apply Click