நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என 35க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!



டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என 35க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இங்கு இரைப்பை குடல் பிரிவில் பணியாற்றி வந்த 30 வயது ஆண் செவிலியருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றிய 40 மருத்துவ பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 22 பேரின் பரிசோதனை முடிவுகளில் யாருக்கும் கொரோனா இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆனாலும் மற்றவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.