நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

மந்திரங்கள் என்றால் என்ன? - அ .ச .ஞானசம்பந்தன்

நம் முன்னோர் பலர் மெய்ஞ்ஞானிகளாகத் திகழ்ந்ததோடு அல்லாமல் விஞ்ஞானிகளாகவும் இருந்தனர் என்பதை இந்நூலின் மூலம்  எளிதில் அறிய முடியும். ஒலியின் (Sound) பெருமையை, சிறப்பை, ஆற்றலை இன்றைய விஞ்ஞான உலகம் காண்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னரே நம் முன்னோர் அறிந்திருந்தனர். ஒலி (Sound) அலைகளாகச் சென்று பரவுகிறது.


ஒவ்வொரு எழுத்திற்கும் உச்சரிக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட அதிர்வு (Frequency) உள்ளது. இந்த அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழும் ஒலியை (Hertz) என்ற அளவு கொண்டு கணக்கிடுவர். ஒலி மாபெரும் வலிமையுடையது என்பதைஇதன் மூலம் விஞ்ஞானம் நமக்கு விளக்கிக் காட்டுகிறது. மிகு அதிர்வு ஒலி (Ultrasound) என்னென்ன புதுமைகளைச் செய்கிறது என்பதை இன்று நாம் காண முடிகின்றது.



நாம் இறைவன் வழிபாடுகளுக்கு ஓம் , நமசிவாய ,அரோஹரா போன்ற  பல்வேறு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் உண்டாகும் அதிர்வினால் என்னென்ன மாற்றம் ஏற்படும் என்பதை சிறப்பாக கூறுகிறது இந்நூல்.

Post a Comment

0 Comments