பதினெட்டு புராணங்களில் ஒன்று கருட புராணம். எழுதியவர் வியாசர். இது இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். பெயரைப் பார்த்ததும், விஷ்ணுவின் வாகனமான கருடனைப் பற்றிய வரலாறு இதில் இருக்கிறதோ என்று எண்ணி விட வேண்டாம்.அப்படியானால், கருட புராணம் என்று பெயர் வைப்பானேன்! இந்த விஷயத்தை ஸ்ரீமன் நாராயணன், கருடனுக்கு முதலில் உபதேசம் செய்தார். கருடன் கேட்ட புராணம் என்பதால், அது கருட புராணமாயிற்று.
கருட புராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தருமம், தவம், சடங்குகள், சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என்று மனித வாழ்க்கைக்குத் தேவையான் எல்லா விவரங்களும் சொல்லப்பட்டுள்ளன.படித்துப் பயப்படுவதற்காக அல்ல: மனத்தைப்பக்குவப்படுத்திக் கொள்வதற்காக!