உலகத்தில் முதல் முதல் வரிவடிவமும், ஒலிக்குறியும் இருத்தனவென்பதும் அவ்வொலி குறியினின்று இயற்கையாக உண்டானது இசைக்கல்வி என்பதும் அவ்வியற்கையாகிய இசைக்கல்வியினின்று உண்டான இயற்கை மொழிகளே உலகமொழிகள்.
இயற்கை நிலப்பிரிவும் இயற்கையின் காலப்பிரிவும் நாவினின்று ஒலிக்கும் இயற்கை ஒலி வடிவெழுத்தே கைக்கு எளிதில் வரைய அதனினின்று பிறந்த இயற்கை வடிவெழுத்தும், இயற்கைச் சொற்களும், இயற்கை புணர்ச்சியும் உலக மக்களால் படைக்கப்பட்டது மொழி வாழும்காலம் உள்ளவரை இது போற்றப்படுகிறது; போற்றப்படும்; போற்றப்படவேண்டும்.
எந்த ஒரு மொழியும் எண்ணத்தின் மனைவியாய் வாழ்வியக்கத்தின் துணைவியாய்க் கருத்டோத்தின் மக்களாய் பெற்றுவுவருக்கும் தாயாய் இருக்கவேண்டும். இருத்தலே சிறந்தது.
இயற்றலும் பாட்டலும் காத்தலும் காத்தவற்றை துறைவாரி வகுத்தலே ஒரு மொழியின் சிறப்பு. தொட்டனைத்தூறும் மணற்கேணியாய், அளிதோறும் அறியாமை தெரிந்து, அறிவொளி பெற்று எல்லாப் பொருளும் இதன்பால் உள. இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையாம் என்று செழுப்பாய் செழுமை பெறுலதே மொழி. இப் பெருமை தமிழ்மொழிக்குன்டு.