1900 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகம்
தமிழகத்தின் இன்னொரு குறைபாட்டினை வெளி நாட்டுத் தொடர்புடையோர் அடிக்கடி கண்டும் கேட்டும் வருகின் றனர். 'தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழக வரலாறு ஆகியவை பற்றி உலகுக்கு எடுத்துரைக்கும் புத்தகங்கள் கிடைக்குமா? எங்கே கிடைக்கும்?" - இக் கேள்விகளைப் பல அயல் நாட்டுப் பேரறிஞர்கள் அந்நாடுகள் செல்லும் வாய்ப்புப் பெற்ற பல பெருமக்களிடமும், இங்காட்டு ஆட்சியாளர்களிடமும், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், அறிவு நிலையங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றின் அதிபரிடமும் கேட்டு வரு கிறார்கள். அவர்கள் கேள்விகளுக்குத் தக்க விடை கூற முடியாத அவல நிலையிலே நாம் இன்றும் இருக்கிறோம்.
தமிழர் அறிய வேண்டிய நூல்கள், தமிழர் பற்றிய நூல்கள் சில சமயம் - ஆங்கிலம் முதலிய மொழிகளில் உள்ளன. தமிழர்கள் அறிய அவை தமிழில் வெளி வந்தாக வேண்டும்! அதே சமயம் தமிழகத்தின் பண்டை இலக்கியச் செல்வங்கள், இன்றைய தமிழர் உயிர்த்துடிப் பையும் வளர்ச்சியையும் காட்டும் அறிவேடுகள் பல தமிழில் உள்ளன, அவை அறிவுலகம் அறிய ஆங்கிலம் முதலிய தக்க பொது மொழிகளில் வெளிவரல் வேண்டும். இருதிசையிலும் புது நூல்கள், புத்தாராய்ச்சிகள் பெருகு வது விரும்பத் தக்கதாகும்.