நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

வேதம் வழங்கும் அறிவு - ஸ்ரீ ஈசோபநிஷத்




'வேதம்' எனும் சம்ஸ்கிருதச் சொல்லின் அடிப்படைச் சொல்லுக்குப் பல வகையில் விளக்கம் தரலாம். ஆனால் அதன் இறுதியான பொருள் ஒன்றே. 'வேதம்' என்றால் அறிவு. ஒப்புக் கொள்ளப்படும் எந்த அறிவும் வேதமே. ஏனென்றால், வேதங்கள் கற்பிக்கும் அறிவே மூல அறிவாகும்.

கட்டுப்பட்ட நிலையிலுள்ள நம் அறிவு குறைபாடுகள் மிக்கது. கட்டுப்பட்ட ஆத்மாவுக்கும் முக்தியடைந்த ஆத்மாவுக்குமிடையே உள்ள வித்தியாசம் என்ன. வென்றால், கட்டுப்பட்ட ஆத்மாவுக்கு நான்கு குறைபாடுகள் உள்ளன. - முதலாவது குறை, அவன் பல தவறுகள் செய்பவன். உதாரணமாக, எங்கள் நாட்டில் மகாத்மா காந்தி மனிதருள் ' மாணிக்கமாகக் கருதப்பட்டவர்.

ஆனால் அவரும் பல தவறுகளைச் செய்தார். அவரது வாழ்வின் - இறுதி நாட்களில் கூட, அவரது உதவியாளர், "மகாத்மா காந்தியவர்களே, நீங்கள் புது. டெல்லிக் கூட்டத்திற்குப் போக வேண்டாம். . அதில் ஆபத்திருப்பதாக * நண்பர்கள் மூலம் அறிகிறேன்' என்று எச்சரித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. போவதில் பிடிவாதமாக இருந்தார். அங்கு - கொல்லப்பட்டார். மகாத்மா காந்தியைப் போன்ற பல பெரு மக்கள், ஜனாதிபதி கென்னடி - இப்படிப் பலர் - தவறுகள் செய்தார்கள்.


Post a Comment

0 Comments