நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

ஜிஎஸ்டி வரி செலுத்துதல் -தெரிந்து கொள்வோம் !

 ஜிஎஸ்டி வரி மாற்றும் வரி செலுத்துவது தொடர்பான தகவல்களை கீழ்கண்ட வினாக்களின் மூலம் தெரிந்து கொள்வோம் .





கேள்வி 1. ஜிஎஸ்டி வரிமுறையில் என்னென்ன வரிகள் செலுத்த வேண்டியிருக்கின்றது?

பதில்: ஜிஎஸ்டி வரி முறையில், மாநிலங்களுக்கிடையில் நடக்கும் எந்த ஒரு சப்ளைக்கும் மத்திய ஜிஎஸ்டி வரி செலுத்தப்பட வேண்டும், (CGST. இது மத்திய அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும்) மற்றும் மாநிலம்யூனியன் பிரதேசம் ஜிஎஸ்டி வரி செலுத்தப்பட வேண்டும் (SGST இது மாநில அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும்). ஒரு மாநிலத்துக்குள்ளேயே நடக்கும் எந்த ஒரு சப்ளைக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி (GST) வரியை செலுத்த வேண்டும், இது சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி இரண்டின் அம்சங்களையும் கொண்டிருக்கும். கூடுதலாக, குறிப்பிட்ட வகைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பவர்கள் ஆதாரத்தில் பிடிக்கப்பட்ட வரி(TDS), ஆதாரத்தில் சேர்க்கப்பட்ட வரி(TCS) ஆகியவற்றையும் அரசுக்குச் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் வட்டி, அபராதம், கட்டணங்கள் மற்றும் பிற பரிவர்த்தனைகள் செலுத்த  வேண்டிய பட்சத்தில் அவையும் செலுத்தப்பட வேண்டும்.

கேள்வி 2. யார் ஜிஎஸ்டி வரியைச் செலுத்த வேண்டும்?

பதில்: பொதுவாக, பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர் ஜிஎஸ்டி வரியைச் செலுத்த வேண்டும். ஆனாலும், சில குறிப்பிட்ட வகைகளில், அதாவது இறக்குமதி மற்றும் பிற குறிப்பிடத்தக்க சப்ளை போன்றவற்றில் வரி பொருட்களைப் பெறுபவர், ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசத்தின் கீழ் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கிடையிலான சேவைகள் வழங்குதல் விஷயங்களில், ஜிஎஸ்டி  இ-காமர்ஸ் ஆப்ரேட்ட்டர்கள் தாங்கள் செய்யும் சேவை சப்ளையின் வழியே செலுத்த வேண்டியிருக்கும். மேலும் அரசு துறைகள், குறிப்பிட்ட வரம்புக்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு [S.51(1)(d)இன் கீழ் ஒரு காண்ட்ராக்ட் ரூ. 2.5 லட்சம்] அதன் மொத்த மதிப்பில் பிடிக்கப்படும் வரிப் பிடித்தம் வெண்டார்களுக்கு வழங்கப்பட வேண்டும். இ-காமர்ஸ் ஆப்ரேட்டர்கள் அவர்கள் செய்யப்படும் சப்ளைகளுக்கான வரி சேகரிக்கப்பட்டு அரசு கணக்கில் வரவு வைக்கப்படும் (மொத்த மதிப்பு - வரி செலுத்தப்பட வேண்டிய பொருட்கள் அல்லது சேவைகளின் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பு ஆனால் சி ஜிஎஸ்டி சட்டம் 2017 ஜிஎஸ்டி பிரிவு 9(5)இன் கீழ் சர்விஸ் ஆபரேட்டர் செலுத்த வேண்டிய சேவைகளின் மதிப்பு இதில் சேர்க்கப்பட மாட்டாது.

கேள்வி 3. எப்பொழுது ஜிஎஸ்டி வரிகள் செலுத்த வேண்டியிருக்கிறது?

பதில்: பிரிவு 12ன் கீழ் பொருட்கள் சப்ளை செய்யப்படும்போது, பிரிவு 13ன் கீழ் சேவைகள் சப்ளை செய்யப்படும் போது ஜிஎஸ்டி வரிகள் செலுத்தப்பட வேண்டும். வரி செலுத்தும் நேரம் என்பது பொதுவாக, பணம் பெறும்போது, இன்வாய்ஸ் கொடுக்கும்போது அல்லது சப்ளை முழுமையடையும் போது ஆகிய மூன்று நிகழ்வுகளின்போது வரும். எதிர்பாராத வெவ்வேறு சுழ்நிலைகள் மற்றும் வெவ்வேறு வரி முறைகள் மேற்குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் விளக்கப்பட்டிருக்கின்றன.

கேள்வி 4: ஜிஎஸ்டி வரி செலுத்தல் முறையரின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதில்: ஜிஎஸ்டி சட்டங்களின் கீழ் செய்யப்படும் பணம் செலுத்தல் முறைகளின் அம்சங்கள் பின்வருமாறு:

ஜிஎஸ்டியின் பொது இணையதளத்தில் அனைத்து வகையான வரி  செலுத்தல்களுக்கும் மின்னணு விண்ணப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. எனவே கையால் பூர்த்தி செய்யும் விண்ணப்பங்களின் தேவை இல்லை.
வரி செலுத்துபவருக்கான வசதிகள் எளிமையாகவும், எந்த நேரத்திலும், எங்கிருந்தும் வரி செலுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் வசதி.
லாஜிக்கல் வரி பரிவர்த்தனை விவரங்கள் மின்னனு வடிவில் உள்ளன.
வரி வருவாய் அரசுக் கணக்கு மிக விரைவாக அனுப்பப்படுகிறது.
காகிதங்கள் அல்லாத பரிவர்த்தனைகள்.
வேகமான கணக்கு நிர்வகிப்பு மற்றும் அறிக்கையிடல்.
அனைத்து பரிவர்த்தனை சீட்டுகளும் மின்னனு வடிவில் கிடைக்கின்றன.
வங்கிக்களுக்கான செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
டிஜிட்டல் விண்ணப்பச் சீட்டுகளுக்கான கிடங்கு வசதி.

கேள்வி 5. எப்படி வரி செலுத்தலாம்?

பதில்: பின்வரும் முறைகளில் வரி செலுத்தலாம்:

(i) பொதுவான தளத்தில் வரி செலுத்துபவர் நிர்வகித்துவரும் கடன் புத்தகத்தலிருந்து செலுத்தலாம். இதன் மூலம் வரி மட்டுமே செலுத்த முடியும். வட்டி, அபராதம் மற்றும் பிற கட்டணங்கள் கடன் புத்தகத்திலிருந்து செலுத்த முடியாது. வரி செலுத்துபவர்கள் செலுத்தப்பட்ட வரிகளை இன்புட் டேக்ஸ் கிரெட்டாக எடுத்துக்கொள்ளவும், அவற்றை அவுட்புட் டேக்ஸ் செலுத்தலுக்காக பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனாலும், சிஜிஎஸ்டியின் எந்தவொரு இன்புட் டேக்ஸ் கிரெடிட்டும், எஸ்ஜிஎஸ்டி வரிச் செலுத்தலுக்காகப் பயன்படுத்த முடியாது. அதேபோல் இதன் மாற்று வழிமுறையும் அனுமதிக்கப்பட மாட்டாது. ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி என்ற வரிசையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

(ii) பொதுவான தளத்தில் வரி செலுத்துபவர் நிர்வகித்து வரும் பணப் புத்தகத்தில் இருந்து பணமாகச் செலுத்தலாம். பணப் புத்தகத்தில் மின்னணு பரிவர்த்தனைகள் (இண்டர்நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு) மூலம் பணம் வைப்பு வைக்க வேண்டும்; மற்றும் ஆர்டிஜிஎஸ்.நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் ட்ரான்ஸ்பர் (நெஃப்ட்) அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் பணமாகச் செலுத்துவதன் மூலமும் ஜிஎஸ்டி வரியைச் செலுத்தலாம்.

கேள்வி 6. எப்பொழுது சப்ளையர் செலுத்த வேண்டிய வரி பெறப்படும்?

பதில்: சாதாரண வரி செலுத்துபவர் ஒருவர் செலுத்த வேண்டிய வரியானது மாத அடிப்படையில் அடுத்து வரும் மாதத்தின் 20ஆம் தேதியில் செலுத்தப்பட வேண்டும். பணமாக செலுத்துவதாக இருந்தால் முதலில் பணப் புத்தகத்தில் அவை வைப்பு வைக்கப்பட வேண்டும். வரி செலுத்தும்போது அதிலிருந்து செலுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு வரி செலுத்தலின்போதும் எடுக்கப்படும் தொகை பதிவு செய்யப்படும். முன்பே குறிப்பிட்டது போல்,கடன் புத்தகத்திலிருந்தும் வரி செலுத்தலாம். மார்ச் மாதத்துக்கான வரி ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி செலுத்தப்பட வேண்டும். நிறுவனம் சார்பாக வரி செலுத்துவோர் காலாண்டு அடிப்படையில் வரி செலுத்த வேண்டும்.

கேள்வி 7. வரி செலுத்துவதற்கான கால வரம்பு நீட்டிக்கப்படவும் அல்லது தவணை முறையில் செலுத்தவும் வாய்ப்பிருக்கிறதா?

பதில்: இல்லை, இவை செல்ஃப்-அசெஸ்டு வரிச் செலுத்தலில் அனுமதிக்கப்படுவதில்லை. பிற நிகழ்வுகளில், கால வரம்பும், தவணை முறை வரி செலுத்தலும் சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 80ன் படி அனுமதிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு உண்டு.

கேள்வி 8 வரி செலுத்துபவர் வரிக் கணக்கு தாக்கல் செய்து, வரிச் செலுத்தாமல் இருந்தால் என்ன ஆகும்?

பதில் : அதுபோன்ற சமயங்களில், தாக்கல் செய்யப்பட்ட கணக்கு, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. பிரிவு 2 (117) ஆனது பிரிவு 39இன் துணைப் பிரிவு (1) தாக்கல் செய்யப்பட்ட கணக்குக்கான முழு வரியையும் செலுத்தியிருந்தால் மட்டுமே அது ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்குத் தாக்கல் ஆகும். அந்தக் கணக்குத் தாக்கலில் மட்டுமே பொருட்களைப் பெறுபவர் இன்புட் டேக்ஸ் கிரெடிட்டைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவார். வேறு வார்த்தைகலில் சொன்னால், சப்ளையர் வரிக் கணக்கு தாக்கல் செய்து முழு செல்ஃப்-அசெஸ்டு வரியையும் செலுத்தினால் மட்டுமே, பொருளைப் பெற்றவர்  தாக்கல் செய்த வரிக்கான இன்புட் டேக்ஸ் கிரெடிட் வசதி ஏற்றுக்கொள்ளப்படும்.

கேள்வி 9: காசோலை வழங்கப்பட்ட தேதி அல்லது பரிவர்த்தனை செய்யப்பட்ட தேதி அல்லது அரசுக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தேதி ஆகிய இரண்டில் எந்தத் தேதி செலுத்த வேண்டிய  வரிக்கான டெபாசிட் தேதியாக எடுத்துக்கொள்ளப்படும்?

பதில்: அரசுக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தேதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

கேள்வி 10.  இ.லெட்ஜர்கள் என்றால் என்ன?

பதில்: மின்னணு லெட்ஜர்கள் அல்லது இலெட்ஜர்கள் என்பவை பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துபவரின் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் இன்புட் டேக்ஸ் கிரெடிட் ஆகியவற்றின் அறிக்கைகளாகும். மேலும், ஒவ்வொரு வரி செலுத்துவோருக்கும் மின்னணு வரி விவர அறிக்கைகள் உண்டு. ஜிஎஸ்டிஎன் என்ற பொது தளத்தில் ஒருமுறை வரி செலுத்துபவர் பதிவு செய்துவிட்டால், இரண்டு இ-லெட்ஜர்கள் (பணம் மற்றும் இன்புட் டேக்ஸ் கிரெடிட் லெட்ஜர்) மற்றும் மின்னணு செலுத்தப்பட வேண்டிய வரி அறிக்கை ஆகியவை தானாகவே உருவாகிவிடும். அவை நம்முடைய டேஷ்போர்டில் எப்போதும்  பார்க்கும் வகையில் இருக்கும்.

கேள்வி 11: செலுத்தப்பட வேண்டிய வரி அறிக்கை என்பது என்ன?

பதில்: செலுத்தப்பட வேண்டிய வரி அறிக்கை என்பது வரி செலுத்துபவர் செலுத்த வேண்டிய குறிப்பிட்ட மாதத்துக்கான மொத்த வரி விவரங்களையும் கொண்டிருக்கும்.

கேள்வி 12: கேஷ் லெட்ஜர் என்பது என்ன?

பதில்: கேஷ் லெட்ஜர் என்பது பணம் மூலம் செய்யப்பட்ட அனைத்து வைப்புகள், மற்றும் வரி செலுத்துபவரின் கணக்கில் செய்யப்பட்டுள்ள டிடிஎஸ் 1 டிசிஎஸ் ஆகியவற்றின் விவரங்களும் அடங்கிய அறிக்கை ஆகும். இந்தத் தகவல்கள் நிகழ் நேரத்தில் (Real Time) செயல்படுத்தப்படுகின்றன. இந்த லெட்ஜரை ஜிஎஸ்டி கணக்கில் செய்யத்தக்க எந்தப் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கேள்வி 13: இன்புட் டேக்ஸ் கிரெடிட் லெட்ஜர் என்பது என்ன?

பதில்: மாத கணக்குத் தாக்கலில் செல்ஃப்-அசெஸ்டு செய்யப்பட்ட இன்புட் டேக்ஸ் கிரெடிட் விவரங்கள் இன்புட் டேக்ஸ் கிரெடிட் லெட்ஜரில் இடம்பெறும். இந்த லெட்ஜரில் உள்ள கிரெடிட் ஆனது வரி செலுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் மற்றும் வட்டி, அபராதம், மற்றும் பிற கட்டணங்கள்  செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட மாட்டாது.

கேள்வி 14: ஜிஎஸ்டிஎன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் இடையிலான தொடர்பு என்ன?

பதில்: ஜிஎஸ்டிஎன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் (சிபிஎஸ்) இடையிலான தொடர்பானது ரியல் டைமில் செயல்படும். சிபிஐஎன் (CPIN) ஆனது தானாகவே வங்கி வழியாக மின்னணு சரிபார்த்தல் நிகழ்வுக்காக அனுப்பப்படும் மற்றும் வரி மற்றும் கட்டணங்களைப் பெறுவது மற்றும் பரிவர்த்தனை விண்ணப்பச் சீட்டு எண் (CIN) வங்கிகள் தானாகவே ஜிஎஸ்டிஎன் பொதுத்தளத்துக்கு அனுப்பப்பட்டு பரிவர்த்தனை விண்ணப்பத்தின் ஒப்புதல் நிறைவுசெய்யப்பட்டதை உறுதி செய்யும். இந்த செயல்முறையில் வங்கி காசாளர் கணக்காளர் அல்லது வரி செலுத்துபவர் உட்பட எந்த மனிதத்  தலையீடும் இருக்காது.

கேள்வி 15: வரி செலுத்துபவர் பல முறை பரிவர்த்தனை விண்ணப்பங்களைச்  செய்ய முடியுமா?

பதில்: ஆம், வரி செலுத்துபவர் பரிவர்த்தனை விண்ணப்பச் சீட்டுகளைப் பகுதியாக நிரப்பி, தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொண்டு பின்னர் கூட நிறைவு செய்ய முடியும். சேமிக்கப்பட்ட விண்ணப்பம் நிறைவு செய்வதற்கு முன் திருத்தம்' செய்வதற்கும் அனுமதிக்கப்படுகிறது. வரி செலுத்துபவர் விண்ணப்பத்தை நிறைவு செய்த பிறகு, வரி செலுத்துவதற்கான பரிவர்த்தனையைச் செய்ய விண்ணப்பத்தை ஜென்ரேட் செய்யலாம். பணம் செலுத்துபவர் அந்த விண்ணப்பத்தைத் தனது பதிவுக்காக அச்சு எடுத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

கேள்வி 16 ஆன்லைனில் உருவாக்கப்பட்ட விண்ணப்பத்தை திருத்த முடியுமா?

பதில்: முடியாது. பரிவர்த்தனை விண்ணப்பத்தை உருவாக்க வரி செலுத்துபவர் அல்லது அவரால் அனுமதிக்கப்பட்ட நபர் ஜிஎஸ்டிஎன் தளத்தில் உள்நுழைந்த பிறகு வரி செலுத்த வேண்டிய விவரங்களை உள்ளிட வேண்டும். பின்னர் நிறைவு செய்ததாக இருந்தால் இடையில் விண்ணப்பத்தை சேமித்துக்கொள்ள முடியும். ஆனால் ஒருமுறை விண்ணப்பம் நிறைவு செய்யப்பட்டு சிபிஐஎன் எண் உருவாக்கப்பட்டுவிட்டால், பிறகு எந்த மாற்றங்களையும் அதில் செய்ய முடியாது.

கேள்வி 17: பரிவர்த்தனை விண்ணப்பச் சீட்டுக்கு வாலிட்டி காலம் இருக்கிறதா?

பதில்: ஆம், பரிவர்த்தனை விண்ணப்பச் சீட்டு உருவாக்கப்பட்டதிலிருந்து 15 நாட்களுக்கு அதன் வாலிட்டி இருக்கும். பின்னர் சிஸ்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிடும். ஆனாலும், தேவையென்றால் வரி செலுத்துபவர் வசதிக்கேற்ப  மற்றொரு விண்ணப்பச் சீட்டை உருவாக்கிக் கொள்ளலாம்.

கேள்வி 18: சிபிஐஎன் என்பது என்ன?

பதில்: சிபிஐஎன் என்பதன் விரிவாக்கம் பொது தள அடையாள எண் (Common Portal Identification Number -CPIN). இது பரிவர்த்தனை விண்ணப்பச் சீட்டு உருவாக்கத்தின் போது வழங்கப்படும். 14 இலக்க எண் கொண்ட இந்த சிபிஐஎன் எண்ணை வைத்து விண்ணப்பச் சீட்டை அடையாளம் காண முடியும். மேலே குறிப்பிட்டது போல, சிபிஐஎன் எண்ணும் 15 நாட்கள் மட்டுமே வாலிட்டி  கொண்டது.

கேள்வி 19: சிஐஎன் என்பது என்ன, அதன் வேலை என்ன?

பதில்: சிஐஎன் என்பதன் விரிவாக்கம் விண்ணப்ப அடையாள எண் (CIN. Chalan Identification Number) 17 இலக்க எண் கொண்ட இதன் இதில் 14 இலக்கங்கள் சிபிஐஎன் மற்றும் 3 இலக்கமானது வங்கியின் அடையாள எண் ஆகும். சிஐஎன் என்பது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் ரிசர்வ் வங்கி ஆகியவற்றால் பரிவர்த்தனை நிறைவடைந்து, அரசு கணக்கில் வரவு வைத்த பிறகு உருவாக்கப்படுகின்றது. இந்த எண் உருவாக்கம் தான் பரிவர்த்தனை நடந்ததற்கும், அரசுக் கணக்கில் வரவு வைத்ததற்குமான அடையாளம். சிஐஎன் எண் வரி செலுத்துபவருக்கும், ஜிஎஸ்டிஎன் தளத்துக்கும் வங்கி தரப்பிலிருந்து தெரிவிக்கப்படும்.

கேள்வி 20 : வரி செலுத்துபவர் முந்தைய மாதங்களுக்கான வரிகளையும் செலுத்த வேண்டும் எனில், வரி செலுத்துதலின் வரிசைகள் என்பது என்னவாக இருக்கும்?

பதில்: பிரிவு 498) நடப்பு வரிக் கணக்கு தாக்கல் தாண்டி செலுத்தப்பட வேண்டிய வரி விவரங்களின் வரிசைகளை நிர்ணயிக்கிறது. அதன்படி, செலுத்தப்பட வேண்டிய வரி வரிசைகள் பின்வருமாறு; முதலில் செல்ஃப்-அசெஸ் செய்யப்பட்ட வரி மற்றும் முந்தைய காலங்களின் பாக்கி கட்டணங்கள்; அதன் பிறகு நடப்பு செல்ஃப் அசெஸ்டு வரி மற்றும் பிற கட்டணங்கள்; பின்னர் பிரிவு 73 அல்லது 74இன் கீழ் செலுத்த வேண்டியது உட்பட வேறு ஏதேனும் கட்டங்கள் செல்த்த வேண்டியிருந்தால் செலுத்தப்பட வேண்டும். இந்த வரிசையில் தான்  பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி 21: மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிற கட்டணங்கள் என்பது எதைக் குறிக்கிறது?

பதில்: “பிற கட்டணங்கள் என்பது வட்டி, அபராதம், கட்டணங்கள் மற்றும் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் செலுத்தப்பட வேண்டிய பிற கட்டணங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது.

கேள்வி 22: இ-எஃப்பிபி (E-FPB) என்றால் என்ன?

பதில்: இ-எஃப்பிபி என்பது எலக்ட்ரானிக் ஃபோகல் பாயிண்ட் பிரான்ச்சின் சுருக்கம். இவை ஜிஎஸ்டி 6) If 5L600TIf y560)6TL பெறுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் ஆகும். ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட வங்கியும், இந்தியா முழுவதுமான பரிவர்த்தனைகளுக்கு ஒரே ஒரு இ-எஃப்பிபி கிளையை மட்டுமே வைத்திருக்க வேண்டும். இந்த இ-எஃப்பிபி கிளை ஒவ்வொரு அரசு துறைகளின் தலைமை அலுவலகத்துக்கும் ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். மொத்தம் 38 கணக்குகள் (சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி கணக்குகள் மற்றும் மாநிலங்கள்யூனியன் பிரதேச அரசுகளுக்கான எஸ்ஜிஎஸ்டி கணக்குகள்) தொடங்கப்பட வேண்டும். இ-எஃப்பிபி மூலம் பெறப்படும் வரி மற்றும் கட்டணங்கள், அந்த இ-எஃப்பிபி கிளை வசம் வைத்துள்ள சரியான ஜிஎஸ்டி கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். நெஃப்ட் / ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி இ-எஃப்பிபி கிளையாக செயல்படும்.

கேள்வி 23: டிடிஎஸ் (TDs) என்பது என்ன?

பதில்: டிடிஎஸ் (TDS) என்பது ஆதாரத்தில் கழிக்கப்படும் வரி ஆகும். பிரிவு 51 படி, அரசு மற்றும் அரசு மேற்பார்வையில் மற்றும் பிற குறிப்பிட்ட நிறுவனங்கள் காண்ட்ராக்ட் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துகிறது. அதாவது ரூ. 2.5 லட்சத்துக்கும் மேலான சப்ளைக்கான மொத்த மதிப்பும் காண்ட்ராக்ட் பரிவர்த்தனைகளில் தான் செயல்படுத்தப்படும். இதுபோன்ற காண்ட்ராக்ட்டுகளின் கீழ் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் போது, குறிப்பிட்ட அரசு/ஆணையம் சப்ளையின் மொத்த மதிப்பில் 1% கழிக்கப்பட்டு, குறிப்பிட்ட  ஜிஎஸ்டி கணக்கில் வரவு வைக்கப்படும்.

கேள்வி 24: இந்த டிடிஎஸ் செயல்முறையில் சப்ளையர் தன்னுடைய வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது எத்தகைய பங்கு வகிக்கிறார்?

பதில்: டிடிஎஸ்-ஆக காட்டப்படும் எந்தவொரு தொகையும் குறிப்பிட்ட சப்ளையரின் மின்னணு கேஷ் லெட்ஜரில் குறிப்பிடப்படும். அவர் இந்த தொகையை அவர் தன்னுடைய வரி வட்டி மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்தப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கேள்வி 25: டிடிஎஸ் செயல்முறைக்கான கணக்கைச் செயல்படுத்த விரும்புபவர் அதனை எப்படிச் செயல்படுத்துவது?

பதில்: டிடிஎஸ் செயல்முறைக்கான கணக்கை பின்வரும் வழிகளில் செயல்படுத்தலாம்:

1. டிடிஎஸ் செயல்முறைக்கான கணக்கைச் செயல்படுத்த விரும்புபவர் சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 24ன் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்.

2. பெறப்பட்ட டிடிஎஸ் தொகையை அடுத்து வரும் மாதத்தின் 10வது நாள் ஜிஎஸ்டிஆர் 7இன் படி வரவு வைக்க வேண்டும்.

3. டிடிஎஸ் என்று டெபாசிட் செய்யப்பட்ட விவரங்கள் சப்லையரின் எலக்ட்ரானிக் கேஷ் லெட்ஜரில் குறிப்பிடப்பட வேண்டும்.

4 அரசுக் கணக்கில் டிடிஎஸ் தொகையை வரவு வைத்த பிறகு 5 நாட்களில் அதற்கான சான்றிதழை டிடிஎஸ் கழிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும். தவறினால் ஒரு நாளைக்கு ரூ. 100 வீதம், ரூ. 5000 வரை டிடிஎஸ் கணக்கைச்  செயல்படுத்துபவர் கட்ட வேண்டியிருக்கும்.

கேள்வி 26: ஆதாரத்தில் சேர்க்கப்பட்ட வரி (TCS) என்பது என்ன?

பதில்: சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 52இன்படி இது இ-காமர்ஸ் ஆபரேட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். அனைத்து இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள், ஏஜெண்டுகள் அல்லாதவர்கள் கணக்கிடப்பட்ட தொகை, “சப்ளையின் மொத்த மதிப்பில்" ஒரு சதவிகிதத்துக்கு மிகாமல் சேகரிக்கப்படும். மாத அடிப்படையில் அந்தத் தொகை இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் மூலம் குறிப்பிட்ட ஜிஎஸ்டி கணக்கில் அடுத்துவரும் மாதத்தின் 10ஆம் தேதியில் வரவு வைக்கப்பட வேண்டும். டிசிஎஸ் ஆக வைப்பு வைக்கப்படும் தொகையானது சப்ளையரின் எலக்ட்ரானிக் கேஷ் லெட்ஜரில் பதிவு செய்யப்படும்.

கேள்வி 27: வரி செலுத்துவதற்குட்பட்ட சப்ளையின் மொத்த மதிப்பு என்றால் என்ன?

பதில்: வரி செலுத்துவதற்குட்பட்ட சப்ளையின் மொத்த மதிப்பு என்பது வரி செலுத்துவதற்குட்பட்ட பொருட்கள் அல்லது சேவைகள் ஒரு மாதம் முழுவதும் ஆபரேட்டரின் வழியாக பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோர் செய்யும் அனைத்து சப்ளைகளின் ஒருங்கிணைக்கப்பட்ட மொத்த மதிப்பாகும். பிரிவு 95ன் கீழ் குறிப்பிடப்பட்ட சேவைகள் மட்டும் இதில் விலக்கு அளிக்கப்படுகிறது. மொத்த  மதிப்பில் இவற்றின் மதிப்பு கழிக்கப்பட்டு சப்ளையரிடம் கொடுக்கப்படும்.

கேள்வி 28: ஜிஎஸ்டிஎன் தளத்தில் ஜிஎஸ்டி பரிவர்த்தனைகளுக்காக கிரெடிட் கார்டு விவரங்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட  வேண்டியது அவசியமா?

பதில்: ஆம் வரி செலுத்துபவர் தன்னுடைய கிரெடிட் கார்டு விவரங்களை பொது ஜிஎஸ்டிஎன் தளத்தில், வரி செலுத்துவதற்கும் முன் பதிவு செய்ய வேண்டும். ஜிஎஸ்டிஎன் தரப்பிலிருந்து, வரி செலுத்துபவரின் கிரெடிட் கார்டு விவரங்கள், அந்த சேவையை வழங்கும் வங்கிகள் மூலம் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்படும். கிரெடிட் கார்டு பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தனைகள், தொழில்கள் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக எந்தவித வரம்பும்  இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments