பிரதம மந்திரி வய வந்தனா திட்டம்
பிரதம மந்திரி வய வந்தனா திட்டம் என்பது மூத்த குடிமக்களுக்கு வயது முதிர்வு கால வருமானத்துக்கு உறுதி செய்யும் நலத்திட்டமாகும்
திட்ட காலம்
பிரதமர் வய வந்தனா திட்டத்தை (PMVVY) 2020 மார்ச் 31-க்கு பின்னரும் மேலும் மூன்றாண்டு காலத்துக்கு 2023 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
முதலில், 2020-21-இல் ஆண்டுக்கு 7.40 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட வருவாய்க்கு அனுமதி. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மறுநிர்ணயம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் மாற்றியமைக்கப்பட்ட விகிதப்படி, நிதியாண்டின் ஏப்ரல் 1 முதல் உறுதியளிக்கப்பட்ட வட்டி விகித ஆண்டு மறு நிர்ணயம், புதிய திட்ட மதிப்பீட்டுக்கிணங்க 7.75 சதவீத உச்சவரம்புக்கு மிகாமல் இருக்கும்.
எல்ஐசி-யால் உருவாக்கப்பட்ட சந்தை மதிப்பு (நிகரச்செலவு) வருவாய்க்கும், திட்டத்தின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட விகித வருவாய்க்கும் இடையிலான வேறுபாடு காரணமாக எழும் தொகைக்கான அனுமதி.
புதிய பாலிசிகளுக்கு, திட்டத்தின் முதலாண்டுக்கான நிதியில் ஆண்டுக்கு 0.5 சதவீதம் மேலாண்மைச் செலவுக்கு வரம்பாக நிர்ணயம். அதன் பின்னர், இரண்டாம் ஆண்டு முதல் அடுத்த 9 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 0.3 சதவீதம் ஆக இருக்கும்.
ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்தில் ஆண்டு வருவாய் விகிதத்தை மாற்றியமைப்பதை அனுமதிக்க நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்குதல்.
திட்டத்தின் மற்ற அனைத்து விதிமுறைகளும் தொடர்ந்து அதேவிதமாக நீடிக்கும்.
ஆண்டுக்கு ரூ.12,000 ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச முதலீடு ரூ.1,56,658 ஆக நிர்ணயம். திட்டத்தின் கீழ், மாதம் குறைந்த பட்சம் ரூ.1,000 ஓய்வூதியம் பெறுவதற்கான முதலீடு ரூ.1,62,162 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்திற்கு குறைந்தபட்சம் நுழைவு வயதானது 60 ஆண்டுகள் (நிறைவு) ஆகும்
- இந்த திட்டத்திற்கு அதிகபட்சம் நுழைவுகள் இல்லை.
- பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனாவிற்கு பாலிசி காலமானது 10 வருட காலமாக உள்ளது
- ஓய்வூதிய முறைகள் - ஆண்டு, அரை ஆண்டுகள், காலாண்டுகள் மற்றும் மாதந்தோறும்.
- குறைந்தபட்சம் கொள்முதல் விலை: மாதத்திற்கு ரூபாய். 1,44,578, காலாண்டிற்கு ரூபாய். 1,47,601, அரை வருஷதிற்கு ரூபாய் 1,49,068, மற்றும் வருடாந்திரதிற்கு ரூபாய். 1,50,000.
- அதிகபட்சமாக கொள்முதல் விலை: மாதத்திற்கு ரூபாய். 7,22,892, காலாண்டிற்கு ரூபாய். 7,38,007, அரை வருஷதிற்கு ரூபாய். 7,45,342, மற்றும் வருடாந்திரதிற்கு ரூபாய். 7,50,000.
- குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை: ரூபாய் 1,000 மாதத்திற்கு, ரூபாய் 3,000 காலாண்டிற்கு, ரூபாய் 6,000 அரை ஆண்டிற்கு மற்றும் ரூபாய் 12,000 வருடத்திற்கு ஆகும்.
- அதிகபட்ச ஓய்வூதிய தொகை: ரூபாய் 5,000 மாதத்திற்கு, ரூபாய் 15,000 காலாண்டிற்கு, ரூபாய் 30,000 அரை ஆண்டுக்கு மற்றும் ரூபாய் 60,000 வருடத்திற்கு ஆகும்.
- இந்த திட்டங்களில் அதிகபட்ச ஓய்வூதியமானது ஒரு முழு குடும்பத்திற்கும், குடும்பத்தில் உள்ள மனைவி மற்றும் சார்ந்திருப்பவர்கள் ஆகியோர்களும் அடங்குவர்.