பணவசதி வாழ்வின் மேம்பாட்டுக்கு உதவ வேண்டும். ஆனால், அது வயிற்றைக் கனப்படுத்தும் வேலையைத்தான் செய்து விடுகிறது.பெருந்தீனி, இடைவிடாத தீளி, சுவையான தீனி என்பதாக உணவு வயிற்றுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் போது, ஆறு போல் இருந்த சிறிய வயிறு, அகண்ட சமுத்திரமாக மாறிவிடுகிறது.
மரம் போல் நிமிர்ந்து நின்ற தேகம், மலைபோல் பெருத்து சரிந்து விடுகிறது,
நிமிர்ந்து நிற்கும் தோரணை, மனித ஜாதிக்கு மட்டுமே சொந்தமாகும்.சாய்ந்து சரிந்து, ஓய்ந்து ஒடிந்து போய் நிற்பது மிருகங்களுக்குரிய தோரணையாகும்.
மளித இனம் இப்படி மாறிவிடக் கூடாது. உணவில் கட்டுப்பாடு வேண்டும். உடல் எடையை ஒரு சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நன்னோக்குடன் தான் இந்த நூல் எழுதப் பெற்றிருக்கிறது.
உணவு உட்கொள்ளுவதின் அவசியம், உணவுப் பொருட்களின் சக்தி விகிதம், உணவைப் பயன்படுத்துகின்ற பக்குவம், ஊளைச்சதை ஏன் உண்டாகிறது? அது தரும் ஆபத்தான விஷயங்கள் என்னென்ன? எப்படி அதிலிருந்து தப்பி வருவது போன்ற சுவையான செய்திகள் இந்த நூலில் சொல்லப் பட்டிருக்கின்றன.