கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துவித கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் பள்ளிகளைத் திறப்பதற்கான சூழ்நிலை தற்போது இல்லாமல் உள்ளது. இதனால், ஆன்லைன் வழியில் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பிலிருந்து தேர்வு நேரத்தில் எளிதில் படிக்கும் வகையில் பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததன் காரணமாக அரசால் நியமிக்கப்பட்ட 18 பேர் கொண்ட குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும் ,நீட் நுழைவுத் தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீதக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.இதுபோல எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தை உருவாக்குவோம் என்றும் கோபிச்செட்டிப்பாளையம் அருகே நம்பியூரில் அரசு நலத்திட்டப் பணிகளை வெள்ளிக் கிழமை தொடங்கி வைத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலினக் குற்றங்களை தடுக்க உதவும் (Posco e-box) மின்னணுப் பெட்டி!