தன் கனவுகளை கோடிகளாய் மாற்றிய எலான் மாஸ்க்கின் வெற்றிக்கதை!

 எலோன் மஸ்க் உலகின் நிஜமான அயர்ன் மேன் என்று அனைவராலும் அழைக்கப்படும்  இவர் ஒரு பொறியியாளர் ஆவார். இவர் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார் மட்டுமன்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு இணையான தொழில்நுட்பத்துடன் செயல்படும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரியாக எலோன் மஸ்க் அறியப்படுகிறார்.

எலோன் மஸ்க்


 ஆரம்பகால வாழ்க்கை மற்றும்  கல்வி


தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியாவில் பிறந்து வளர்ந்த மஸ்க் சிறு வயதில் இருந்தே மிகவும் சுறு சுறுப்பானவராக இருந்துள்ளார். அவரது தந்தை பொறியியாளராகவும் தாய் உணவு கட்டுபாட்டாளராகவும் (டையட்) இருந்தனர். அவர்கள் தங்கள் மகனின் தொழில் நுட்ப அறிவை கண்டு அதை வளர்க்க முயற்சித்தனர்.

மஸ்க் தனது 10 வயதில் கணிணியை வாங்கி அதில் நிரலாக்க மொழியை எப்படி எழுதுவது என்பதை கற்றுக்கொண்டார். 12 வயதில் அவர் ப்ளாஸ்டார் எனும் வீடியோ கேமை உருவாக்கினார். அதை அவர் 500 டாலருக்கு விற்றதாக கூறப்படுகிறது.

1988 ஆம் ஆண்டு இவர் பிரிட்டோரியா ஆண்கள் உயர்நிலை பள்ளியில் தனது பட்டத்தை பெற்ற பிறகு அவர் ஐந்து மாதங்கள் பிரிட்டோரியா பலகழைகழகத்தில் பயின்றார். பின்னர் அவர் கனடாவுக்கு சென்றார். 1989 ஆம் ஆண்டு குயின்ஸ் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். அப்போது தென்னாப்பிரிக்காவில் இளைஞர்கள் கட்டாய ராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டனர். மஸ்க் கல்லூரி படிக்க அயல் நாட்டுக்கு வந்ததால் அதில் இருந்து தப்பித்தார்.


பின்னர் மஸ்க் பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பிறகு அவர் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் இயற்பியல் பட்டதாரியாக சேர்ந்தார். பிறகு அவரது கனவுகளை நினைவாக்க இரண்டு நாட்களில் பல்கலைகழகத்தில் இருந்து வெளியேறினார்.


வெற்றியின்  துவக்கம்

1995 ஆம் ஆண்டு மஸ்க் தனது சகோதரர் கிம்பலுடன் இணைந்து ஜிப் 2 என்னும் ஐடி நிறுவனத்தை உருவாக்கினார். அவர்கள் நகர செய்திகளை படிப்பதற்கான செய்திதாள்களுக்கான மென்பொருளை உருவாக்கினர். முதலில் அவரது நிறுவனத்தை யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை. ஆனால் இறுதியில் உள்ளூர் செய்திதாள்கள் முதல் தேசிய செய்தித்தாள்கள் வரை தங்கள் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஜிப் 2 நிறுவனத்தை பயன்படுத்தி கொண்டன.

1999 ஆம் ஆண்டு ஜிப் 2 நிறுவனத்தை காம்பெக் ஆல்டாவிஸ்டா என்னும் வலை தேடுபொரி நிறுவனம் 340 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.


பீட்டர் தியேல் மற்றும் மேக்ஸ் லெவ்ஸின் ஆகியோருடன் மஸ்க் கூட்டணி போட்டார். பின்னர் அவர்கள் ஆன்லைன் நிதி சேவைகள் மற்றும் மின்னஞ்சல் கட்டண நிறுவனமான எக்ஸ்.காம் எனும் நிறுவனத்தை துவங்கினார்.


2000 ஆம் ஆண்டில் எக்ஸ்.காம் நிறுவனம் அமெரிக்க மென்பொருள் நிறுவனமான கான்ஃபினிட்டி என்னும் நிறுவனத்தோடு இணைந்தது. இந்த நிறுவனத்தோடு இணைந்து அவர் பேபல் என்னும் ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கான முறையை உருவாக்கினார். மஸ்க் பேபல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் தலைவராகவும் ஆனார்.

அந்த நிறுவனத்தின் 180 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை மஸ்க் தனது கைகளில் வைத்திருந்தார். இறுதியாக பேபல் 1.5 பில்லியன் டாலர்களுக்கு இபே நிறுவனம் வாங்கியது. அதன் பிறகு மஸ்க் இணைய வணிகங்களை விட்டு செல்ல ஆயத்தமானார். அடுத்ததாக அவர் பொறியியல் மீது தனது கவனத்தை திருப்பினார்.

டெஸ்லாவின் தொடக்கம் 

2004 ஆம் ஆண்டு மஸ்க் மோட்டார் பொறியாளர்களான மார்டின் எபர்ஹார்ட் மற்றும் மார்க் டார்பென்னிங் ஆகியோருடன் சேர்ந்தார். அவர்களுடன் சேர்ந்து அவர் முதல் மின்சார காரை வடிவமைப்பதில் கவனம் செலுத்தினார்.





தொடர்ச்சியாக கருத்து வேறுபாடுகளால் 2007 ஆம் ஆண்டு அவர் எபர்ஹார்ட் வெளியேற்றபட்ட பின்னர், மஸ்க் நிர்வாக கட்டுப்பாட்டை தானே எடுத்துக்கொண்டு டெஸ்லாவின் தலைமை அதிகாரியாக ஆனார். டெஸ்லா உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விரும்பத்தக்க கார் நிறுவனங்களில் ஒன்றாகும்.


தனது விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை மஸ்க் துவங்கினார். இதை கொண்டு இவர் நாசா மற்றும் அமெரிக்க விமான படையுடன் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டார். ராக்கெட்டுகளை வடிவமைப்பது, இராணுவ பயணங்களை மேற்கொள்வது போன்றவற்றை மஸ்க் செய்ய துவங்கினார்.

நாசாவுடன் கூட்டு முயற்சியில் 2025 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரரை அனுப்ப போவதாக மஸ்க் கூறியுள்ளார்.

>

தற்போதைய செல்வாக்கு

மஸ்கிற்கு 40.4 பில்லியன் டாலர் அளவில் சொத்துக்கள் உள்ளன. ஜூன் 2020 நிலவரப்படி அவற்றில் பெரும்பகுதி டெஸ்லா நிறுவனத்தில் பங்குகளாக உள்ளது.

டெஸ்லாவில் அவர் 34 மில்லியனுக்கும் அதிகாமாக பங்குகளை வைத்துள்ளார். 12 ஜனவரி 2018 அன்று டெஸ்லாவின் மதிப்பு 11.6 பில்லியனாக இருந்தது. மஸ்க் அதில் வருடாந்திர சம்பளம் வாங்குபவராக இல்லை. மாறாக அடுத்த பத்து ஆண்டுகளில் டெஸ்லா நிறுவனத்தின் மேம்பாட்டால் வரும் லாபத்தை பொறுத்து பணத்தை பெறும்.

பத்து ஆண்டு ஒப்பந்தம் பங்குதாரர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரே மாதிரியான உறுதிமொழியை அளித்தது மற்றும் மஸ்க் அந்த நிறுவனத்தில் இணைந்திருக்க அது உதவியது.

மஸ்க்கின் பொன் மொழிகள்:

“தோல்வி என்பது ஒரு பகுதியே ஆகும். நீங்கள் இதுவரை தோல்வியே அடையவில்லை என்றால் இதுவரை புதிதாக நீங்கள் எதையுமே செய்யவில்லை என்று பொருள்.”

“குளிர் தொழில்நுட்பத்தை பற்றி நான் படிக்கும்போதெல்லாம் அதை அமெரிக்காவில் அல்லது வட அமெரிக்காவில் இருந்து கற்க விரும்புகிறேன்.”

“தோல்வியடைவதற்கான சாத்தியங்கள் இருந்தாலும் கூட அது முக்கியமானதாக இருந்தால் அதற்காக நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.”

“நான் செவ்வாய் கிரகத்தில் இறக்க விரும்புகிறேன். ஆனால் கதிர்களின் தாக்கத்தால் நான் இறக்க மாட்டேன்.”


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !