நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

அறிந்து கொள்வோம் - தேசியத் திறன் மேம்பாட்டு இயக்கம்

   ஒரு  நாட்டின்  பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டுக்கும் உந்துவிசையாக இருப்பது திறனும் அறிவும் தான். வளர்ந்த நாடுகளின் தொழிலாளர்களில் சுமார் 60 சதவீதம் முதல் 90 சதவீதம் பேர் வரை திறன் பெற்றவர்களாக உள்ளனர். ஆனால் இந்தியாவிலோ முறையான தொழில் திறன் பெற்றவர்களின் அளவு (20-24 வயதுடையவர்களில்) மிகச் சொற்ப அளவாக, ஐந்து சதவீதம் மட்டுமே உள்ளது.


எனவே, நமது இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய அரசின் இருபது அமைச்சகங்களும் / துறைகளும், திறன் மேம்பாட்டுக்காக எழுபதுக்கும் மேற்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. பல்வேறு துறைகளிலும், மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் திறன்பயிற்சித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில், 2015 ஜூலை 15-ஆம் தேதியன்று, தேசியத் திறன் மேம்பாட்டு இயக்கத்தை மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் தொடங்கியது. திறன்பயிற்சி வழங்கும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதோடு, அதேப் பயிற்சிகள் தரமானதாகவும், விரைவாகவும் வழங்கப்படுவதோடு, பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதாகவும் இந்த இயக்கம் செயல்படுகிறது.

திட்ட அறிக்கை

வாழ்க்கைத் தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மக்களின் விருப்பங்களையும், திறன்பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கான பணியமர்த்துவோரின் தேவைகளையும் ஒத்திசையச் செய்யும் விதமாக, தொடக்கம் முதல் இறுதிவரையிலான பயிற்சிக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி, திறன் மேம்பாட்டு முயற்சிகளை துரிதகதியில் அதிகரிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். அதன்படி கீழ்க்காணும் இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

திட்ட இலக்குகள்

1) திறன்மேம்பாட்டுக்கான தொடக்கம் முதல் இறுதி வரையிலான கட்டமைப்பை உருவாக்கி, அதன்மூலம் வாழ்நாள் முழுவதுமான கற்றலுக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இதன்படி, பள்ளிப்பாடத்திட்டத்தில் திறன்வளர்த்தலும் சேர்க்கப்படும். தரமான நீண்டகால மற்றும் குறுகியகாலத் திறன் பயிற்சிகளுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும். அவ்வாறு திறன் பெறும் பயிற்சியாளர்களுக்கு நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவதோடு, வேலையில் தொடர்ந்து படிப்படியான முன்னேற்றத்திற்கும் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.

2) வாழ்க்கைத்தரம் தொடர்ந்து மேம்படவேண்டும் என்ற விருப்பத்தோடு திறன்பயிற்சி பெறுபவர்களின் எண்ணமும், வேலை அளிப்பவரின் நோக்கமான மேம்பட்ட உற்பத்தித்திறன் என்ற இலட்சியமும் ஒரு முறையில் குவிகின்றவாறு திறன் பயிற்சிக் கட்டமைப்பு உருவாக்கப்படும்.

3) தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரத்தில் பலதுறைகளுக்கு இடையேயான திறன் பயிற்சி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். எல்லா அமைச்சகங்களுக்கும், மாநிலங்களுக்கும், பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்துகின்ற தர உத்தரவாதம் உள்ள திறன் பயிற்சி கட்டமைப்பாக அது விளங்கும்.

4) முக்கியமான அமைப்பு சாராத துறைகளில் (கட்டுமானத் தொழில் போன்ற திறன் பயிற்சிக்கான வாய்ப்புகள் அரிதாக உள்ள) திறன்பயிற்சி வசதிகள் உருவாக்கப்படும். அங்கே மறுதிறன் பயிற்சிகளுக்கும், மேல்திறன் பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு, அமைப்பு சாராத துறைகளில் இருந்து அமைப்பு சார்ந்த துறைகளில் வேலை செய்வதற்கான வழிகள் உருவாக்கப்படும்.

5) சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை உறுதி செய்வதாக நீண்டகாலத் திறன் பயிற்சிகளுக்குப் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படும். அதனால் மேலான திறன்பெற்ற பணியாளர்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

6) திறமையான பயிற்றுநர்கள் தொகுப்பை உருவாக்குவதற்காக மேம்பட்ட தரமுள்ள பயிற்றுநர் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

7) அரசுத்துறைகளிலும், தொழில் நிறுவனங்களிலும் தற்போதுள்ள பயிற்சிக்கான வசதிகளைத் தக்கவாறு மாற்றி அமைத்து, திறன்பயிற்சி பெறுவோருக்கான இடங்கள் அதிகரிக்கப்படும்.

8) சர்வதேசத் தரத்திலான பயிற்சிகளை வழங்கி, வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கான வழிகள் ஏற்படுத்தப்படும்.

9) பள்ளிகளில் முறையான பாடத்திட்டத்தில் பயில்வோருக்கு தொழில்முறைப் பாடத்திட்டத்திற்கு எளிதாக மாறிக்கொள்ள வழிசெய்யப்படும்.

10) மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகள், மாநில அரசுகள், செயல்படுத்தும் அமைப்புகள் ஆகியவற்றுக்கு இடையே திறன்மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும்.

11) சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கும், அனுகூலமற்ற பிரிவினருக்கும், ஆதரவு அளிக்கும்விதமாக அவர்களுக்கு என பிரத்யேகமான திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.

12) திறன்பயிற்சி பெறுவதன் முக்கியத்துவத்தையும் மேன்மையையும் பற்றி சமூகத்திடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளைஞர்கள் அனைவரும் திறன்பயிற்சி பெறத் துடிக்கின்றவாறு நிலைமை ஏற்படுத்தப்படும்.

13) தொழிலாளர் சந்தைத் தகவல் தொகுப்பு என்ற தேசிய அளவிலான தகவல்தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்படும். திறன் பெற்ற தொழிலாளர்களின் தேவை அளிப்பு பற்றிய தகவல் தளமாக அது விளங்கும். மேலும் அந்த விவரத் தொகுப்பு நாடு முழுவதும் நடைபெறும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் பற்றிய விவரங்களையும் தரும். மறுபுறத்தில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், நடைபெற்றுவரும் திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளைக் கண்காணிக்கும் அமைப்பாகவும் அது விளங்கும்.

தேசியத்திறன் மேம்பாட்டு இயக்கத்தின் உத்திகள்

• தேசியத்திறன் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் ஆரம்பத்தில் ஏழு துணை இயக்கங்கள் செயல்படும். ஒவ்வொரு துணை இயக்கமும், இலக்கை எட்டுவதற்கான கட்டுமானங்களாகத் திகழும். துணை இயக்கங்களின் கவனம் பெறும் விஷயங்களாவன:

• தற்போதுள்ள பயிற்சி மையங்களை மறுசீரமைத்தும், புதிய பயிற்சி மையங்களை உருவாக்கியும் திறன்மேம்பாட்டுக்கான நீண்டகால மற்றும் குறுகிய காலத் தேவைகளை நிறைவேற்றுவது

• ஒவ்வொரு துறைக்குமான பிரத்யேக திறன்பயிற்சிக்கான முன்னெடுப்பு செய்வது

• தற்போதுள்ள திறன்பயிற்சிகளை ஒரு குவியத்திற்குள் கொணர்வது

• அரசுத் துறைகளின் தற்போதைய பயிற்சி வசதிகளைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்வது

• திறன் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துவது

• வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர உதவுவது

• பயிற்சி பெற்றவர்களின் வாழ்கைத் தரம் தொடர்ந்து மேம்பட உதவுவது


திறன் துணை இயக்கம்:

நிறுவனரீதியான பயிற்சி

• திறன் பயிற்சித் திட்டங்களிலும், இறுதியான விளைவுகளிலும் தரத்தைப் பேணுவதோடு அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு பயிற்சிகள் கிடைக்க உறுதிசெய்வது

• கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப குறுக்காகவோ அல்லது நெடுக்காகவோ திறன் பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புக்கு வழி அமைத்தல்

• திறன் பயிற்சி பெறுவோர் அனைவருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும் விதமாக எந்தவிதமான திறன் கொண்டவர்களுக்குத் தேவை இருக்கிறதோ, அத்தகைய திறன் பயிற்சிகளை வழங்குதல்

• ஐ.டி.ஐ போன்ற தற்போதுள்ள பயிற்சி நிலையங்கள் அனைத்தையும் நவீனப்படுத்தி, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்ற திறன்களை அளிப்பதாக மாற்றுதல்

• தற்போதுள்ள பயிற்சி நிறுவனங்களை நவீனப்படுத்தும்போது கீழ்க்காணும் ஐந்து முக்கியமான அம்சங்களில் அதிக கவனம் செலுத்துவது

• பாடத்திட்டத்தில் நெகிழ்ச்சிக்போக்கு

• பயிற்சி அளிக்கும் சாதனங்கள் மற்றும் பட்டறைகள்

• நிதிவசதிக்கு முன்மாதிரியாதல்

• தொழில் பழகுநர் திட்டம்மூலமாகவும் பயிற்சிகள் அளிப்பதோடு, ஓரளவு சம்பாதிக்கவும் வழி ஏற்படுத்துதல்

• தொழில் பயிற்சி பற்றிய பொதுமக்களின் கருத்துக்களை மாற்றி, நீண்ட காலத்தில் வேலையில் முன்னேற்றம் அடைய தொழில்பயிற்சிதான் உதவும் என்று ஏற்கச் செய்தல்

கட்டமைப்பு:

• கட்டுமானத் தொழில் உள்ளிட்ட கட்டமைப்புத் துறைகளில் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக மேலான திறன் அபிவிருத்திக்காகப் பயிற்சி வசதிகளை உருவாக்குவது. தொழிலாளர்கள் வேலைசெய்யும் இடத்தில், வேலையின் போதே இத்தகைய திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்க முக்கியத்துவம் தரப்படும்.

ஆதாரம் : http://www.skilldevelopment.gov.in/

Post a Comment

0 Comments