பாரத ஸ்டேட் வங்கியில் இந்தியா(State Bank of India) முழுவதும் காலியாக உள்ள Probationary Officer (PO)பதவிகளுக்கு பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது / ஈ.டபிள்யூ.எஸ் / ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 750 / -.எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி பிரிவினர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை :
மூன்று கட்டங்களாக ஆன்லைன் தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய நாட்கள்:-
விண்ணப்பிக்க தொடக்க தேதி: 14/11/2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04/12/2020
பிரிலிம்ஸ் தேர்வு : 31/12/2020
முதன்மைத் தேர்வு : 29/01/2021
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://sbi.co.in / என்ற இணையதளம் மூலம் 04/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View
அல்லது உதவி எண் 022-22820427
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.35,000 சம்பளத்தில் 125 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!