இந்த யோகத்தின் அடிப்படைத் தத்துவமானது: நாம் செய்யும் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அதன் விளைவைப்பற்றிக் கவலை கொள்ளலாகாது. பலன் தானே வரும். இதன் பொருள் என்ன? காரியத்தில் கவனம் செல்லவில்லையானால் அந்தக் காரியம் சரிவரச் செய்ய முடியாது. பலனும் நன்றாக அமையாது. பலனைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டால் காரியம் நன்றாகத் நிகழாது, பலனும் விரோதமாக அமையும்.
0 Comments