அறிமுகம்
காவலர் முதல் காவல் துறை தலைமை இயக்குநர் வரை அனைவரும் காக்கி சீருடையிலிருந்தாலும் அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள அதிகாரங்களும் அடிப்படைத் தகுதிகளும் வேறு என்பதை நாம் அறிவோம். காவல் துறை அலுவலர்களின் உடையிலுள்ள வேறுபாடுகளை சிறிது காண்போம்.
வேறுபாடுகள்
காவல் துறை தலைமை இயக்குநர்(Director General of Police)
காவல் துறை தலைமை இயக்குநர் தன் சீருடையில் தோள் பட்டையில் ஐ.பி.எஸ், அசோக சின்னம், அதன் அடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும் தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவ ஐ.பி.எஸ்., சின்னம் மற்றும் காலரில் ரிப்பன் இருக்கும்.
காவல் துறை கூடுதல் இயக்குநர்(Additional Director General of Police)
காவல் துறை கூடுதல் இயக்குநர், தன் சீருடையின் தோள் பட்டையில் ஐ.பி.எஸ், அசோக சின்னம், அதன் அடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும், தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவ ஐ.பி.எஸ்., சின்னம் இருக்கும்.
காவல் துறை தலைவர் (Inspector General of Police)
காவல் துறை தலைவர், தோள் பட்டையில் ஐ.பி.எஸ், அசோக சின்னம், ஐந்துமுனைத் தாரகை, அதன் அடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் இருக்கும்.
காவல் துறை துணைத் தலைவர்(Deputy Inspector General of Police)
காவல் துறை துணைத் தலைவர், தோள் பட்டையில் ஐ.பி.எஸ், அசோக சின்னம், அதன் அடியில் முக்கோணவடிவில் மூன்று தாரகைகள் இருக்கும்.
தேர்வுநிலை காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police, Selection grade)
தேர்வுநிலை காவல் கண்காணிப்பாளர் சீருடையின் (10 ஆண்டுகளுக்கு மேல் தேர்வு நிலை) தோள் பட்டையில் ஐ.பி.எஸ், அசோக சின்னம், அதன் அடியில் முக்கோண வடிவில் இரண்டு தாரகைகள் இருக்கும்.
காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police)
காவல் கண்காணிப்பாளர் சீருடையின், தோள் பட்டையில் ஐ.பி.எஸ் அல்லது டி.பி.எஸ், அசோக சின்னம், அதன் அடியில் ஒரு தாரகை இருக்கும்.
இணை காவல் கண்காணிப்பாளர் (Joint Superintendent of Police)
இணை காவல் கண்காணிப்பாளர் சீருடையின், தோள் பட்டையில் ஐ.பி.எஸ், அசோக சின்னம் இருக்கும்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(Additional Superintendent of Police)
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீருடையின், தோள் பட்டையில் ஐ.பி.எஸ், அசோக சின்னம் இருக்கும்.
உதவி காவல் கண்காணிப்பாளர்(Assistant Superintendent of Police)
உதவி காவல் கண்காணிப்பாளர் சீருடையின், தோள் பட்டையில் ஐ.பி.எஸ், மூன்று தாரகைகள், துணை கண்காணிப்பாளர்கள், தோள் பட்டையில் டி.பி.எஸ் மற்றும் மூன்று தாரகைகள் இருக்கும்.
உதவி கண்காணிப்பாளர்(பயிற்சி)(Assistant Superintendent of Police(Probationer)
உதவி கண்காணிப்பாளர் (பயிற்சி) சீருடையின், தோள் பட்டையில் ஐ.பி.எஸ் மற்றும் ஒரு தாரகை இருக்கும்.
துணை காவல் கண்காணிப்பாளர்(பயிற்சி)(Deputy Superintendent of Police(Training)
துணை காவல் கண்காணிப்பாளர், சீருடையின், தோள் பட்டையில் டி.பி.எஸ் மற்றும் ஒரு தாரகை இருக்கும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து அலுவலர்களும் கரு நீல ஊதல் கயிறு(Dark blue whistle cord) இடது தோள் பட்டையில் அணிந்திருப்பார்கள்.
காவல் ஆய்வாளர் (Inspector of Police)
காவல் ஆய்வாளர், சீருடையின், தோள் பட்டையில் டி.பி., கருநீல சிகப்பு ரிப்பன் மற்றும் மூன்று தாரகைகள் இருக்கும்.
காவல் சார்பு ஆய்வாளர் (Sub-Inspector of Police)
காவல் சார்பு ஆய்வாளர், சீருடையின் தோள் பட்டையில் டி.பி., கருநீல சிகப்பு ரிப்பன் மற்றும் இரண்டு தாரகைகள் தாலுகா காவல் ஆய்வாளர்களும், சார்பு ஆய்வாளர்களும் காக்கி நிற ஊதல் கயிறு அணிகிறார்கள். ஆயுதப்படை ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் கரும்பச்சை நிற ஊதல் கயிறு அணிகிறார்கள்.
காவல் சார்பு ஆய்வாளர்(பயிற்சி) (Sub-Inspector of Police) Probationer)
காவல் சார்பு ஆய்வாளர்(பயிற்சி) சீருடையின், தோள் பட்டையில் டி.பி., கருநீல சிகப்பு ரிப்பன் மற்றும் ஒரு தாரகை, தாலுகா காவல் ஆய்வாளர்களும், சார்பு ஆய்வாளர்களும் காக்கி நிற ஊதல் கயிறு அணிகிறார்கள். ஆயுதப்படை ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் கரும்பச்சை நிற ஊதல் கயிறு அணிகிறார்கள்.
சார்பு ஆய்வாளரிலிருந்து காவல் துறை தலைமை இயக்குநர் வரை உள்ள அலுவலர்கள் தங்கள் பதவிக்கேற்ப அசோக சின்னமுடைய தவிட்டு அல்லது பழுப்பு நிற இடைக்கச்சைகளும் (Belt) அதே நிறமுடைய காலணிகளும் அணிகிறார்கள். தலை அணி தொப்பி (Pea cap)அல்லது பெரே(Bere) ஆகும்.
தலைமை காவலர்(Head Constable)
தலைமை காவலர்(Head Constable) சீருடையின் மேற்கையில் 3 பட்டை அணிய வேண்டும்.
முதல் நிலை காவலர்(Police constable Grade-1)
முதல் நிலை காவலர் சீருடையின் மேற்கையில் 2 பட்டை அணிய வேண்டும்.
தலைமை காவலர் நீல நிற செர்ஜ் தொப்பியில், வெளிர் நீல நிற ரிப்பன் சுற்றப் பட்டிருக்கும். முதல் நிலை காவலரும் தலைமை காவலரும் பக்கிள் உடைய நீல நிற இடைக்கச்சையும் அணிகின்றனர். காலணி அனைவருக்கும் கறுப்பு நிறமாகும்.
ஆதாரம் : தமிழ்நாடு காவல்துறை