புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் மொத்தம் - 279 காலியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர் 04/06/21 தேதி மாலை 5.45 மணிக்குள் சம்மந்தப்பட்ட மையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
நிறுவனம் அங்கன்வாடி
கல்வி தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி
பணி அங்கன்வாடி ஊழியர், அங்கன்வாடி உதவியாளர்
காலிப்பணியிடங்கள் அங்கன்வாடி ஊழியர் - 136,அங்கன்வாடி உதவியாளர் - 104.
வயது 18 முதல் 35 வரை
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 26/05/2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 04 /06/2021
சம்பளம் அங்கன்வாடி ஊழியர் ரூ.6,540/-
அங்கன்வாடி உதவியாளர் ரூ. 4,375/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகார பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின்பு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களுடன் இணைத்து தொடர்புடைய முகவரிக்கு நேரில் சென்று 04/06/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் முறையில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
விண்ணப்ப படிவம் : https://py.gov.in/sites/default/files/wcd26052021app.pdf
அதிகாரப்பூர்வ இணையதளம் https://py.gov.in/